இந்தியா-ஜப்பான் மோதல்: 'டி-20' போட்டியில் முதன் முறையாக...
இந்தியா-ஜப்பான் மோதல்: 'டி-20' போட்டியில் முதன் முறையாக...
ADDED : செப் 04, 2026 11:01 PM

புதுடில்லி: இந்தியா-ஜப்பான் நாடுகளின் 75 ஆண்டு நட்புறவை கொண்டாடும் வகையில் இரு அணிகள் முதன் முறையாக 'டி-20' போட்டியில் மோத உள்ளன.
வரலாற்று சிறப்பு வாய்ந்த இப்போட்டி, வரும் 22ம் தேதி, ஜப்பானின் சனோ நகரில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடக்க உள்ளது.
இதற்கு சுஜுகி கோப்பை என பெயரிடப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) வெளியிட்ட அறிக்கை:
இந்தியா-ஜப்பான் நட்புறவின் 75 ம் ஆண்டு கொண்டாட்ட தினத்தை முன்னிட்டு, சர்வதேச 'டி-20' ல் இரு அணிகள் மோத உள்ளன. இதற்காக ஜப்பான் கிரிக்கெட் சங்கம், பி.சி.சி.ஐ., இணைந்து பெருமை கொள்கிறது.
வரும் 2036ல் ஒலிம்பிக், பாராலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா முயற்சிக்கிறது. இதற்காக இரு நாடுகள் இடையே ஒருவருக்கு ஒருவர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும், ஒருங்கிணைந்து செயல்படுவதை நோக்கமாக கொண்டு, இருநாட்டு பிரதமர்கள் மோடி, சனாயே டகாய்ச்சி இணைந்து எடுத்த 'ஸ்போர்ட் 75' என்ற ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இப்போட்டி நடக்க உள்ளது.
ஆசிய விளையாட்டில் இந்தியா நேரடியாக காலிறுதியில் (செப். 28) பங்கேற்க உள்ளது. இதற்கு முன்னதாக ஜப்பான் மோதல் (செப். 22) நடக்கும்.
