/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கோலி வாக்குவாதம் * மெல்போர்ன் விமான நிலையத்தில்
/
கோலி வாக்குவாதம் * மெல்போர்ன் விமான நிலையத்தில்
ADDED : டிச 19, 2024 11:05 PM

மெல்போர்ன்: 'அனுமதி இல்லாமல் எனது குடும்பத்தினரை போட்டோ எடுக்கக் கூடாது,' என பத்திரிகையாளரிடம் வாக்குவாதம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'பார்டர்-கவாஸ்கர்' டிராபி டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட், வரும் டிச. 26ல் மெல்போர்னில் துவங்குகிறது. இதற்காக இந்திய அணியினர் நேற்று மேல்போர்ன் வந்தனர்.
விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த போது கோலி குடும்பத்தினரை, ஆஸ்திரேலியா பத்திரிகையாளர்கள் போட்டோ எடுக்க முயன்றனர். இதனால் கோபம் அடைந்த கோலி, பத்திரிகையாளரிடம் சென்று, வாக்குவாதம் செய்தார்.
அப்போது கோலி கூறுகையில்,''எனது குழந்தைகளுடன் செல்கிறேன், எங்களுக்கு 'பிரைவசி' தேவை. என்னிடம் கேட்காமல் எனது குடும்பத்தினரை போட்டோ எடுக்க வேண்டாம்,'' என்றார்.
அங்கிருந்த பத்திரிகையாளர், கேமராமேன் இணைந்து, ' ஆஸ்திரேலிய வீரர் போலந்தை தான் போட்டோ எடுத்தோம், உங்களது குடும்பத்தினரை எடுக்கவில்லை,' என்றனர். பின் கோலி சமாதானம் அடைந்தார்.
லண்டன் செல்கிறாரா
கோலி சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா கூறுகையில்,'' கோலி தனது குடும்பத்துடன் லண்டன் செல்ல திட்டமிட்டுள்ளார். விரைவில் இந்தியாவில் இருந்து, அங்கு குடியேற உள்ளார்,'' என்றார்.
ஹேசல்வுட் விலகல்
பிரிஸ்பேனில் நடந்த 3வது டெஸ்டில் பங்கேற்ற ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட்டின் வலது காலின் பின்புறம் காயம் ஏற்பட்டது. 'ஸ்கேன்' எடுத்து பார்த்ததில் 2 முதல் 3 வாரம் ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். எனவே இவர், இந்தியாவுக்கு எதிரான மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார்.
ஹேசல்வுட் கூறுகையில், ''காயத்தால் பாதியில் விலகுவது ஏமாற்றம் அளிக்கிறது. விரைவில் குணமடைந்து, முழு உடற்தகுதியுடன் போட்டிக்கு திரும்புவதே இலக்கு,'' என்றார்.