/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கோலி மனதில் மாறாத மந்திரம்... * ரன் மழை ரகசியம் என்ன
/
கோலி மனதில் மாறாத மந்திரம்... * ரன் மழை ரகசியம் என்ன
கோலி மனதில் மாறாத மந்திரம்... * ரன் மழை ரகசியம் என்ன
கோலி மனதில் மாறாத மந்திரம்... * ரன் மழை ரகசியம் என்ன
ADDED : டிச 01, 2025 11:34 PM

ராஞ்சி: ''மனதளவில் தயாராக இருந்தால், போட்டியில் சாதிக்கலாம்,'' என கோலி தெரிவித்தார்.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நேற்று முன் தினம் நடந்த முதல் போட்டியில் இந்தியா வென்றது.
கடின உழைப்பு
இதில் 120 பந்தில் 135 ரன் விளாசிய விராத் கோலி, ஒருநாள் அரங்கில் 52வது சதம், 44வது முறையாக ஆட்டநாயகன் விருது வென்றார். டெஸ்ட், 'டி-20' அரங்கில் ஓய்வு பெற்ற இவர், லண்டனில் 'செட்டில்' ஆகியுள்ளார். ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடுகிறார். 'ஒவ்வொரு நாளும் 120 சதவீதம் கடினமாக உழைத்தால், யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை,' என்பதே கோலியின் வெற்றி மந்திரம். இதற்கு ஏற்ப ராஞ்சிக்கு முன்னதாகவே வந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். இந்திய அணிக்கும் வெற்றி தேடித் தந்தார்.
அணுகுமுறை எப்படி
இது குறித்து கோலி கூறுகையில்,''கிரிக்கெட் போட்டிக்கான எனது அணுகுமுறை மனரீதியானது. என்னால் விளையாட முடியும் என மனதளவில் தோன்றும் வரை, உடல் அளவில் 'பிட்' ஆக இருக்க பயிற்சி செய்வேன். 15-16 ஆண்டுகளில் 306 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளேன். இதனால், 'பிரேக்' இல்லாமல் இரண்டு மணி நேரம் பேட்டிங் பயிற்சி செய்தாலே, போட்டிக்கு தயாராகிவிடுவேன்.
ஒவ்வொரு போட்டிக்கும் முன் எப்படி செயல்பட போகிறேன் என மனதில் கற்பனை செய்து பார்ப்பேன். களத்தில் விரைவாக ஓடுவது, துடிப்பாக பேட் செய்வது போல உணர்ந்தால், போட்டிக்கு தயார் என அர்த்தம். அந்த நாளில் நல்ல துவக்கம் கிடைத்து விட்டால், ரன் மழை பொழியலாம்
தவிர, நான் ஏற்கனவே சொன்னது போல, எங்கு வந்தாலும் 120 சதவீத உழைப்பை வெளிப்படுத்துவேன். ராஞ்சி சூழ்நிலையை அறிந்து கொள்ளவே, முன்னதாக வந்தேன். சில மணி நேரம் வலை பயிற்சியில் ஈடுபட்டு, தயாரானேன். எனக்கு 37 வயது என்பதால், போட்டிக்கு முன் ஒருநாள் ஓய்வு எடுத்துக் கொண்டேன்.
ராஞ்சி ஆடுகளம் 20-25 ஓவர் சிறப்பாக இருந்தது. பின் மந்தமாக மாறியது. இந்த நேரத்தில் அனுபவம் கைகொடுக்க, ரசித்து விளையாடினேன்,'' என்றார்.
எதிர்காலம்
இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் கூறுகையில்,''ராஞ்சி ஒருநாள் போட்டியில் ரோகித் (57), கோலி சிறப்பாக பேட் செய்தனர். இருவரும் அனுபவ வீரர்கள். வரும் 2027ல் நடக்க உள்ள உலக கோப்பை தொடரில் (50 ஓவர்) கோலி இடம் பெறுவாரா என்பது உட்பட இவரது எதிர்காலம் பற்றி இப்போது கேள்வி எழுப்புவது சரியல்ல,''என்றார்.

