தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/ஐந்து விக்கெட் சாய்த்த மானவ் * கவுன்டி சாம்பியன்ஷிப்பில்...

ஐந்து விக்கெட் சாய்த்த மானவ் * கவுன்டி சாம்பியன்ஷிப்பில்...

ஐந்து விக்கெட் சாய்த்த மானவ் * கவுன்டி சாம்பியன்ஷிப்பில்...


ADDED : ஜூன் 22, 2026 11:47 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 22, 2026 11:47 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டான்டன்: இங்கிலாந்தில், கவுன்டி சாம்பியன்ஷிப் ('டிவிசன்-1') தொடர் நடக்கிறது. இதில் இடம் பெற்றுள்ள வார்விக்சயர் அணியில் இளம் இந்திய சுழற்பந்துவீச்சாளர் மானவ் சுதார் 23, விளையாடுகிறார். சமீபத்தில் புதிய சண்டிகரில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமான மானவ் சுதார், இரு இன்னிங்சில் 7 விக்கெட் சாய்த்த இருந்தார்.

தற்போது டான்டனில் நடக்கும் போட்டியில் வார்விக்சயர், சாமர்செட் அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் சாமர்செட் 208 ரன் எடுத்தது. இதில் மானவ், 2 விக்கெட் சாய்த்தார். வார்விக்சயர் 330 ரன் எடுத்தது.

இரண்டாவது இன்னிங்சில் சாமர்செட் அணி 435 ரன் குவித்தது. சுழலில் கைகொடுத்த மானவ், 5 விக்கெட் சாய்த்தார். இரண்டாவது இன்னிங்சில் 314 ரன் எடுத்தால் வெற்றி என வார்விக்சயர் அணி விளையாடி வருகிறது. இரு இன்னிங்சிலும் மானவ், 7 விக்கெட் சாய்த்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us