/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
46 ரன்னுக்கு சுருண்டது இந்தியா
/
46 ரன்னுக்கு சுருண்டது இந்தியா
UPDATED : அக் 17, 2024 03:34 PM
ADDED : அக் 15, 2024 11:12 PM

பெங்களூரு: நியூசிலாந்துக்கு எதிரான பெங்களூரு டெஸ்ட், முதல் இன்னிங்சில் இந்திய அணி 46 ரன்னுக்கு சுருண்டது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, மூன்று போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது. முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்தானது. இரண்டாவது நாள் ஆட்டம் 15 நிமிடம் முன்னதாக துவங்கியது. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, பேட்டிங் தேர்வு செய்தார்.
இந்திய அணியில் சுப்மன் கில்லுக்குப் பதில் சர்பராஸ் கான் சேர்க்கப்பட்டார். பும்ரா, சிராஜ் என இரண்டு 'வேகம்', அஷ்வின், ஜடேஜா, குல்தீப் என மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்தியா களமிறங்கியது.
விக்கெட் சரிவு
இந்திய அணிக்கு ரோகித் சர்மா (2), ஜெய்ஸ்வால் ஜோடி மோசமான துவக்கம் தந்தது. கோலி, சர்பராஸ் கான், ராகுல், ஜடேஜா, அஷ்வின் என ஐந்து வீரர்கள் 'டக்' அவுட்டாகினர். ஜெய்ஸ்வால் (13), ரிஷாப் (20) மட்டும் இரட்டை இலக்க ரன் எடுத்தனர். 'டெயிலெண்டர்கள்' பும்ரா 1, குல்தீப் 2 ரன்னில் அவுட்டாகினர்.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 31.2 ஓவரில் 46 ரன்னுக்கு சுருண்டது. நியூசிலாந்து சார்பில் ஹென்றி 5, வில்லியம் ஓ ரூர்கே 4 விக்கெட் சாய்த்தனர்.
பின் களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 83/1 ரன் எடுத்திருந்தது.