/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஸ்மிருதி மந்தனா 'நம்பர்-1' * ஐ.சி.சி., ஒருநாள் தரவரிசையில்...
/
ஸ்மிருதி மந்தனா 'நம்பர்-1' * ஐ.சி.சி., ஒருநாள் தரவரிசையில்...
ஸ்மிருதி மந்தனா 'நம்பர்-1' * ஐ.சி.சி., ஒருநாள் தரவரிசையில்...
ஸ்மிருதி மந்தனா 'நம்பர்-1' * ஐ.சி.சி., ஒருநாள் தரவரிசையில்...
ADDED : அக் 28, 2025 11:05 PM

துபாய்: ஐ.சி.சி., ஒருநாள் பேட்டர் தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, முதன் முறையாக 828 புள்ளி பெற்று, முதலிடத்தில் தொடர்கிறார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியானது. பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, முதன் முறையாக 828 புள்ளி பெற்று, முதலிடத்தில் நீடிக்கிறார்.
29 வயதான இவர், உலக கோப்பை தொடரில் நியூசிலாந்துக்கு எதிராக 109, வங்கதேசத்திற்கு எதிராக 34 ரன் எடுத்ததை அடுத்து, இந்த முன்னேற்றம் கிடைத்தது.
இரண்டாவது இடத்தில் சுமார் 100 புள்ளி வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்டுனெர் (731) உள்ளார். இவர் 6 இடம் முன்னேறினார். 2 இடம் முந்திய தென் ஆப்ரிக்க அணி கேப்டன் லாரா (716) 3வது இடம் பிடித்தார். நாட் சிவர் பிரன்ட் (711), ஆஸ்திரேலியாவின் பெத் மூனே (709) 4, 5வது இடத்துக்கு தள்ளப்பட்டனர்.
இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர் (603), 8 இடம் முன்னேறிய ஜெமிமா (596) 18, 19வதாக உள்ளனர். பவுலர் தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா (655), இரண்டு இடம் பின்தங்கி, 5வது இடம் பெற்றார். இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன் (747) முதலிடத்தில் நீடிக்கிறார்.

