sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

பயிற்சியாளர் காம்பிர் கோபம் ஏன்... * ஆடுகள பராமரிப்பாளரிடம் மோதல்

/

பயிற்சியாளர் காம்பிர் கோபம் ஏன்... * ஆடுகள பராமரிப்பாளரிடம் மோதல்

பயிற்சியாளர் காம்பிர் கோபம் ஏன்... * ஆடுகள பராமரிப்பாளரிடம் மோதல்

பயிற்சியாளர் காம்பிர் கோபம் ஏன்... * ஆடுகள பராமரிப்பாளரிடம் மோதல்

2


ADDED : ஜூலை 29, 2025 11:09 PM

Google News

ADDED : ஜூலை 29, 2025 11:09 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லண்டன்: ஓவல் டெஸ்ட் போட்டி துவங்கும் முன்பே களம் 'சூடாகி' உள்ளது. பயிற்சியாளர் காம்பிர், ஆடுகள பராமரிப்பாளர் இடையே காரசார வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (ஆண்டர்சன் - சச்சின் டிராபி) பங்கேற்கிறது. நான்கு போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து, 2--1 என முன்னிலையில் உள்ளது.

முக்கியமான ஐந்தாவது டெஸ்ட் நாளை லண்டன், கெனிங்டன் ஓவல் மைதானத்தில் துவங்குகிறது. இதற்காக நேற்று ஓவல் வந்த சாய் சுதர்சன், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் உள்ளிட்ட இந்திய வீரர்கள் வலை பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது இந்திய தலைமை பயிற்சியாளர் காம்பிர், போட்டி நடக்க உள்ள ஆடுகளத்தின் அருகே சென்றிருக்கிறார். உடனே ஆடுகள தலைமை பராமரிப்பாளர் லீ போர்டிஸ் குறுக்கிட்டுள்ளார். 2.5 மீ., துாரம் தள்ளி நின்று பார்க்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.

நீண்ட வாக்குவாதம்

இதனால் கோபமடைந்த காம்பிர்,'நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் சொல்ல தேவையில்லை. அதற்கான உரிமை உங்களுக்கு இல்லை. நீங்கள் வெறும் ஆடுகள பராமரிப்பாளர் தான்,''என காட்டமாக கூறியுள்ளார். அதற்கு போர்டிஸ்,'உங்கள் மீது ஐ.சி.சி.,யிடம் புகார் அளிக்க நேரிடும்,'என எச்சரித்துள்ளார். உடனே காம்பிர்,'நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் புகார் அளித்துக் கொள்ளுங்கள்,' என பதிலடி கொடுத்துள்ளார்.

மோதல் நீண்டு கொண்டே போவதை உணர்ந்த இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் இருவரையும் சமாதானம் செய்துள்ளார். போர்டிசை தனியாக அழைத்துச் சென்று,'ஆடுகளத்திற்கு எவ்வித சேதமும் ஏற்படுத்த மாட்டோம்,''என உறுதி அளித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு சலுகை

இது குறித்து சிதான்ஷு கோடக் கூறுகையில்,''ஸ்டம்ப்ஸ் பகுதியில் இருந்து 2.5 மீ., துாரம் தள்ளி நின்று ஆடுகளத்தை பார்வையிட சொன்னார். நாங்கள் 'ஸ்பைக்ஸ்' இல்லாத சாதாரண 'ஷூ' தான் அணிந்திருந்தோம். இதனால் ஆடுகளத்திற்கு எவ்வித சேதமும் ஏற்பட போவதில்லை. நாங்களும் புத்திசாலிகள் தான் என்பதை பராமரிப்பாளர் உணர வேண்டும். ஆணவத்துடன் நடந்து கொள்வது சரியல்ல. இது வெறும் ஆடுகளம் தான். உடைந்துவிடும் என அஞ்சுவதற்கு 200 ஆண்டு பழமையான பொக்கிஷம் அல்ல.

எங்களை ஆடுகளத்தின் அருகே 'கூலிங் பாக்ஸ்' எடுத்துச் செல்ல கூட ஊழியர்கள் அனுமதிக்கவில்லை. இதன் எடை 10 கிலோ கூட இருக்காது. ஆனால், ஆடுகளத்தை அருகே சென்று பார்வையிட இங்கிலாந்து தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மெக்கலம், அணி இயக்குநர் ராப் கீ போன்றவர்களுக்கு எவ்வித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை,''என்றார்.

வருகிறார் ஆகாஷ் தீப்

இந்திய அணியின் அனைத்து வேகப்பந்துவீச்சாளர்களும் முழுஉடற்தகுதியுடன் இருப்பதாக பயிற்சியாளர் காம்பிர் தெரிவித்தார். இதனால், ஓவல் டெஸ்டில் கம்போஜிற்கு பதில் ஆகாஷ்தீப் இடம் பெறலாம். பும்ரா இடம் பெற தவறினால், அர்ஷ்தீப் அல்லது பிரசித் கிருஷ்ணா வாய்ப்பு பெறுவர். ஷர்துல் தாகூருக்கு பதில் மணிக்கட்டு 'ஸ்பின்னர்' குல்தீப் சேர்க்கப்படலாம். காயம் காரணமாக ரிஷாப் விலகிய நிலையில் விக்கெட்கீப்பராக துருஷ் ஜுரல் இடம் பெறுவார்.






      Dinamalar
      Follow us