/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இங்கிலாந்து அணிக்கு அபராதம் * உலக சாம்பியன்ஷிப் புள்ளி குறைப்பு
/
இங்கிலாந்து அணிக்கு அபராதம் * உலக சாம்பியன்ஷிப் புள்ளி குறைப்பு
இங்கிலாந்து அணிக்கு அபராதம் * உலக சாம்பியன்ஷிப் புள்ளி குறைப்பு
இங்கிலாந்து அணிக்கு அபராதம் * உலக சாம்பியன்ஷிப் புள்ளி குறைப்பு
ADDED : ஜூலை 16, 2025 09:57 PM

துபாய்: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது டெஸ்ட், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா (36, 100 சதவீதம்), இங்கிலாந்து (24, 66.67%), இலங்கை (16, 66.67%), 'டாப்-3' இடத்தில் இருந்தன.
இந்திய அணி 12 புள்ளியுடன் (33.33%) நான்காவது இடத்தில் உள்ளது. சமீபத்தில் முடிந்த லார்ட்ஸ் டெஸ்டில், இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 2 ஓவர்கள் குறைவாக வீசியதாக, 'மேட்ச் ரெப்ரி' புகார் தெரிவித்தார். இதனை கேப்டன் ஸ்டோக்ஸ் ஏற்றுக் கொண்டதால், முறைப்படி விசாரணை நடத்தப்படவில்லை.
இதையடுத்து ஒரு ஓவருக்கு 1 புள்ளி குறைப்பு, 5 சதவீத சம்பள அபராதம் என்ற ஐ.சி.சி., விதிப்படி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில், இங்கிலாந்து அணிக்கு 2 புள்ளி (22) குறைக்கப்பட்டது. சதவீதம் 61.11 ஆக குறைய, பட்டியலில் இங்கிலாந்து 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இலங்கை 2வது இடத்துக்கு முன்னேறியது. தவிர, இங்கிலாந்து வீரர்களுக்கு, சம்பளத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதற்கு இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,'' லார்ட்சில் இரு அணிகளின் 'ஓவர் ரேட்' மிக மோசமாக இருந்தது. ஆனால் ஒரு அணியை மட்டும் விட்டுவிட்டு, மற்ற அணிக்கு எப்படி அபராதம் விதிக்கின்றனர்,' என கேட்டுள்ளார்.