தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/வைபவ் சூர்யவன்ஷிக்கு ரூ. 55 லட்சம்

வைபவ் சூர்யவன்ஷிக்கு ரூ. 55 லட்சம்

வைபவ் சூர்யவன்ஷிக்கு ரூ. 55 லட்சம்

2


ADDED : ஜூன் 01, 2026 11:19 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2026 11:19 PM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆமதாபாத்: கிரிக்கெட் லீக் தொடரில் இளம் 'ஹீரோ'வாக ஜொலித்தார் ராஜஸ்தானின் 15 வயது வைபவ் சூர்யவன்ஷி. 16 போட்டியில் 72 சிக்சர், 63 பவுண்டரி உட்பட 776 ரன் (ஸ்டிரைக் ரேட் 237.30) குவித்து முதலிடம் பெற்றார். அதிக ரன்னுக்கான ஆரஞ்ச் கேப் (ரூ.10 லட்சம்), வளர்ந்து வரும் சிறந்த வீரர் (ரூ. 10 லட்சம்), சூப்பர் ஸ்டிரைக்கர் (ரூ.10 லட்சம்), அதிக சிக்சர் (ரூ. 10 லட்சம்), அதிக மதிப்புமிக்க வீரர் (436.5 புள்ளி, ரூ. 15 லட்சம்) என 5 விருதுகளுக்கு ரூ. 55 லட்சம், காரும் பரிசாக பெற்றார். இவரை அயர்லாந்து தொடருக்கான இந்திய 'டி-20' அணியில் சேர்க்க வேண்டுமென முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய முன்னாள் வீரர் மதன் லால் கூறுகையில்,''வைபவ் திறமையானவர். இவரிடம் சச்சின், கோலி, கபில் தேவ், கவாஸ்கரின் சிறந்த ஆட்ட மனநிலையை காண முடிகிறது. இவரை போன்றவர்கள் நுாற்றாண்டுக்கு ஒரு முறை தான் தோன்றுவர்,''என்றார்.

பால் காரணமா

விருது நிகழ்ச்சியில் வைபவிடம் பேசிய ரவி சாஸ்திரி,'வலிமையான 'ஷாட்' அடிக்கிறீர்கள். ஒரு நாளைக்கு எவ்வளவு பால் குடிக்கிறீர்கள்' என கேட்டார். அதற்கு வைபவ், 'நான் இப்போது பால் குடிப்பதில்லை,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us