ADDED : ஆக 07, 2025 10:45 PM

மக்காய்: முதல் 'டி-20' போட்டியில் இந்திய பெண்கள் 'ஏ' அணி 13 ரன்னில் தோல்வியடைந்தது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய பெண்கள் 'ஏ' அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேற்று மக்காய் நகரில் நடந்தது. 'டாஸ்' வென்ற இந்திய 'ஏ' அணி கேப்டன் ராதா, பீல்டிங் தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலிய 'ஏ' அணிக்கு அலிசா (27), தஹ்லியா (17) ஜோடி துவக்கம் கொடுத்தது. கோர்ட்னி, கேப்டன் நிக்கோல் தலா 11 ரன் எடுத்தனர். அனிகா 44 பந்தில் 50 ரன் எடுத்து உதவினார். ஆஸ்திரேலிய 'ஏ' அணி 20 ஓவரில் 137/6 ரன் எடுத்தது. இந்தியா சார்பில் பிரேமா 3 விக்கெட் சாய்த்தார்.
ராகவி ஆறுதல்
இந்திய 'ஏ' அணிக்கு ஷைபாலி (3), தாரா (7) ஏமாற்றினர். உமா 31 ரன் எடுத்தார். இந்தியா 52/4 ரன் என திணறியது. பின் வரிசையில் ராகவி (33), ராதா (26) சற்று போராடினர். இந்திய 'ஏ' அணி 20 ஓவரில் 124/5 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.