/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
வரலாறு படைத்த இந்திய பெண்கள் * இங்கிலாந்துக்கு எதிராக தொடரை வென்றது

ADDED : ஜூலை 10, 2025 10:51 PM

மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிராக முதன் முறையாக 'டி-20' தொடரை கைப்பற்றி, வரலாறு படைத்தது இந்திய பெண்கள் அணி. நான்காவது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பெண்கள் அணி ஐந்து போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் 3 போட்டி முடிவில் 2-1 என இந்தியா முன்னிலையில் இருந்தது. 4வது போட்டி மான்செஸ்டரில் நடந்தது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் டாமி பியுமன்ட், பேட்டிங் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியின் சோபியா (22), அலைஸ் (18), கேப்டன் டாமி (20) நிலைக்கவில்லை. 20 ஓவரில் 126/7 ரன் மட்டும் எடுத்தது. 'சுழலில்' அசத்திய இந்தியாவின் ராதா 2, ஸ்ரீ சரணி 2, தீப்தி 1 விக்கெட் சாய்த்தனர்.
ஷபாலி விளாசல்
இந்திய அணிக்கு ஸ்மிருதி (32 ரன், 31 பந்து), ஷபாலி (31 ரன், 19 பந்து) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 26 ரன் எடுக்க, வெற்றி எளிதானது.
இந்திய அணி 17 ஓவரில் 127/4 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஜெமிமா (24), ரிச்சா (7) அவுட்டாகாமல் இருந்தனர்.
தீப்தி '300'
சர்வதேச அரங்கில் 300 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார் இந்திய சுழற்பந்துவீச்சு ஆல் ரவுண்டர் தீப்தி சர்மா 27. இவர் 5 டெஸ்ட் (20), 106 ஒருநாள் (135), 128 'டி-20' (145) என மொத்தம் 139 போட்டியில் இந்த இலக்கை அடைந்தார்.
* ஜூலன் கோஸ்வாமிக்கு (355) அடுத்து, 300 விக்கெட் சாய்த்த இரண்டாவது இந்திய வீராங்கனை தீப்தி.