sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

மந்தனா 'நம்பர்-3' * ஒருநாள், 'டி-20' பேட்டர் வரிசையில்...

/

மந்தனா 'நம்பர்-3' * ஒருநாள், 'டி-20' பேட்டர் வரிசையில்...

மந்தனா 'நம்பர்-3' * ஒருநாள், 'டி-20' பேட்டர் வரிசையில்...

மந்தனா 'நம்பர்-3' * ஒருநாள், 'டி-20' பேட்டர் வரிசையில்...


ADDED : டிச 17, 2024 11:26 PM

Google News

ADDED : டிச 17, 2024 11:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துபாய்: ஐ.சி.சி., ஒருநாள், 'டி-20' பேட்டர் தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 3வது இடத்துக்கு முன்னேறினார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஒருநாள், சர்வதேச 'டி-20' போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியானது. ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்திய துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, மூன்று இடம் முன்னேறி, 'நம்பர்-3' இடம் பிடித்தார்.

சமீபத்தில் முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் 54, 105 ரன் விளாசினார். 2 இடம் பின்தங்கிய இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், 13வது, 6 இடம் முன்னேறிய ஜெமிமா 15வது இடங்களில் உள்ளனர்.

ஒருநாள் பேட்டர் வரிசையில் தென் ஆப்ரிக்காவின் லாரா 'நம்பர்-1' இடத்தில் உள்ளார்.

'டி-20'ல் மூன்று

சர்வதேச 'டி-20' பேட்டர் வரிசையில் ஸ்மிருதி மந்தனா, ஒரு இடம் முன்னேறி, 3வது இடம் பெற்றார். மற்ற இந்திய வீராங்கனைகள் ஹர்மன்பிரீத் கவுர் 10, ஜெமிமா 15வது இடத்தில் உள்ளனர்.

'டி-20' பவுலர்களில் இந்தியாவின் தீப்தி சர்மா, 2 இடம் முன்னேறி, 2 வது இடம் பிடித்தார். 'டி-20' பேட்டர் வரிசையில் ஆஸ்திரேலியாவின் பெத் மூனே, 'நம்பர்-1' ஆக உள்ளார்.






      Dinamalar
      Follow us