/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
விதர்பா அணி ஆதிக்கம் * இரானி கோப்பையில்...
/
விதர்பா அணி ஆதிக்கம் * இரானி கோப்பையில்...
ADDED : அக் 04, 2025 11:09 PM

நாக்பூர்: இரானி கோப்பை போட்டியில் விதர்பா அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
நாக்பூரில், இரானி கோப்பை போட்டியின் (முதல் தரம்) 62வது சீசன் நடக்கிறது. 'நடப்பு ரஞ்சி கோப்பை சாம்பியன்' விதர்பா, 'ரெஸ்ட் ஆப் இந்தியா' அணிகள் விளையாடுகின்றன. முதல் இன்னிங்சில் விதர்பா 342, ரெஸ்ட் ஆப் இந்தியா 214 ரன் எடுத்தன. மூன்றாவது நாள் முடிவில் விதர்பா அணி, இரண்டாவது இன்னிங்சில் 96/2 ரன் எடுத்து, 224 ரன் முன்னிலை பெற்றிருந்தது.
நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. துருவ் ஷோரே (27), டேனிஷ் (16) நிலைக்கவில்லை. கேப்டன் அக்சய் வாத்கர் (36), ஹர்ஷ் துபே (29), தர்ஷன் (35) சற்று கைகொடுத்தனர். விதர்பா அணி இரண்டாவது இன்னிங்சில் 232 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ரெஸ்ட் ஆப் இந்தியா சார்பில் கம்போஜ் 4 விக்கெட் சாய்த்தார்.
அடுத்து 361 ரன் எடுத்தால் வெற்றி என களமிறங்கியது ரெஸ்ட் ஆப் இந்தியா அணி. அபிமன்யு ஈஸ்வரன் (17), ஆர்யன் ஜுயல் (6) என இருவரும் துவக்கத்தில் ஏமாற்றினர். நான்காவது நாள் முடிவில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணி, இரண்டாவது இன்னிங்சில் 30/2 ரன் எடுத்து, 330 ரன் பின்தங்கி இருந்தது. இஷான் கிஷான் (5), கேப்டன் ரஜத் படிதர் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.