/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
2 ஓவரில் 2 'ஹாட்ரிக்' * கிஷோர் குமார் சாதனை
/
2 ஓவரில் 2 'ஹாட்ரிக்' * கிஷோர் குமார் சாதனை
ADDED : ஜூலை 11, 2025 11:28 PM

கெஸ்கிரேவ்: இங்கிலாந்தில் டு கவுன்டீஸ் சாம்பியன்ஷிப் டிவிசன்-6 தொடர் நடக்கிறது. கெஸ்கிரேவில் நடந்த லீக் போட்டியில் இப்ஸ்கோல் கிளப் (ஐ.பி.எஸ்.சி.ஒ.எல்.,), கெஸ்கிரேவ் கிளப் அணிகள் மோதின. முதலில் கெஸ்கிரேவ் அணி களமிறங்கியது. தனது 4வது ஓவரை வீசிய இப்ஸ்கோல் வீரர் கிஷோர் குமார், கடைசி 3 பந்தில் ஹென்றிக், ஜேக், சிரனை 'டக்' அவுட்டாக்கி, 'ஹாட்ரிக்' விக்கெட் வீழ்த்தினார்.
மீண்டும் வந்த கிஷோர் குமார், தனது 5வது ஓவரில் பார்ரி (5), ஜாக் வின் (0), கார்ட்டரை (0) அவுட்டாக்கி, மீண்டும் 'ஹாட்ரிக்' விக்கெட் சாய்த்தார். கெஸ்கிரேவ் அணி 30 ஒவரில் 138 ரன்னில் சுருண்டது. கிஷோர் குமார் 6 விக்கெட் சாய்த்தார். பின் களமிறங்கிய இப்ஸ்கோல் அணி 20.3 ஓவரில் 143/3 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
முதல் பவுலர்
கிரிக்கெட் அரங்கில் அடுத்தடுத்த ஓவரில் 'ஹாட்ரிக்' விக்கெட் சாய்த்த முதல் பவுலர் ஆனார் கிஷோர் குமார். இதற்கு முன் 2017ல் ஷெபீல்டு தொடரில் (ஆஸி.,), நியூ சவுத் வேல்ஸ் வீரர் மிட்சல் ஸ்டார்க், 113 ஆண்டுக்கு முன் ஆஸ்திரேலியாவின் ஜிம்மி மாத்யூஸ் (எதிர்-தெ.ஆப்., இடம்: ஓல்டு டிரபோர்டு, இங்கிலாந்து), ஒரு போட்டியில் அடுத்தடுத்த இன்னிங்சில் 'ஹாட்ரிக்' விக்கெட் சாய்த்தனர்.