தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/கோலி 'நூறு' கனவுகள் கண்டாலே...: சச்சின் சாதனையை நெருங்க முடியுமா

கோலி 'நூறு' கனவுகள் கண்டாலே...: சச்சின் சாதனையை நெருங்க முடியுமா

கோலி 'நூறு' கனவுகள் கண்டாலே...: சச்சின் சாதனையை நெருங்க முடியுமா


ADDED : செப் 28, 2026 11:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 11:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவனந்தபுரம்: கோலி 2.0 ஆரம்பமாகியுள்ளது. ஒருநாள் அரங்கில் 15,000 ரன் எட்டிய இவர், சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதம் அடிக்க காத்திருக்கிறார்.

திருவனந்தபுரத்தில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி, வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது. இதில் 139 ரன் விளாசிய இந்தியாவின் கோலி, 55வது சதம் அடித்தார். 37 வயதிலும், உடல் அளவில் 'பிட்' ஆக உள்ளார். சக இந்திய ஜாம்பவான் சச்சினுக்கு தொடர்ந்து சவால் கொடுக்கிறார்.

சச்சின் வழியில்ஒருநாள் போட்டி வரலாற்றில், 15,000 ரன்னை எட்டிய இரண்டாவது வீரர் கோலி. 315 போட்டியில் 15,080 ரன் எடுத்துள்ளார். முதலிடத்தில் சச்சின் (18,426 ரன், 463 போட்டி) உள்ளார். அதிவேகமாக 15,000 ரன் எட்டினார் கோலி (303 இன்னிங்ஸ்). சச்சினுக்கு 377 இன்னிங்ஸ் தேவைப்பட்டது. சச்சின், 34 வயது 66 நாள்; கோலி, 37 வயது, 326 நாளில் 15,000 ரன் எட்டினர். ஒருநாள் அரங்கில் 55வது சதம் அடித்த கோலி, அதிக சதம் அடித்தவர் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறார். அடுத்த இடத்தில் சச்சின் (49) உள்ளார். இப்படி இருவரையும் பல விஷயங்களில் ஒப்பிடலாம்.

சதத்தில் சதம்அடுத்து சச்சினின் 'சதத்தில் சதம்' சாதனையை குறி வைக்கிறார் 'கிங்' கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர் பட்டியலில் சச்சின் (100 சதம், டெஸ்டில்- 51, ஒருநாள் போட்டியில்-49 ) முதலிடத்தில் உள்ளார். 2வது இடத்தில் கோலி (86 சதம், டெஸ்டில்-30, ஒருநாள் போட்டியில்-55, 'டி-20' போட்டியில்- 1) உள்ளார். இன்னும் 15 சதம் அடித்தால், சச்சின் சாதனையை முறியடிக்கலாம். டெஸ்ட், 'டி-20' போட்டியில் ஓய்வு பெற்ற கோலி, ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடுகிறார். அடுத்து நியூசிலாந்து, இலங்கை, ஆசிய கோப்பை நடக்க உள்ளன. 2027, உலக கோப்பை (50 ஓவர்) பைனலுக்கு இந்தியா முன்னேறினால் 13 போட்டிகளில் விளையாடலாம். ஒட்டுமொத்தமாக 30 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கலாம். இதில் கோலி, 15 சதம் அடிக்க வேண்டும். ஒருநாள் அரங்கில், கோலிக்கு 1-1000 ரன்னை எட்ட, 27 போட்டி தேவைப்பட்டது. 9001-10,000 ரன்னை 11 போட்டியில் எட்டினார். 14,001-15,000 ரன்னை எட்ட, 16 போட்டி மட்டுமே தேவைப்பட்டது. இதே வேகத்தில் சென்றால், சச்சின் சாதனையை தகர்க்கலாம்.

கோப்பை முக்கியம்கோலி கூறுகையில், ''சாதனைகளை எட்டுவதில் கவனம் செலுத்துவதில்லை. இந்திய அணிக்காக சிறப்பாக செயல்படுவேதே இலக்கு. நல்ல உடற்தகுதியுடன், களத்தில் கடினமாக உழைக்க வேண்டும். அடுத்த உலக கோப்பை தொடருக்கு (50 ஓவர்) இன்னும் ஒரு ஆண்டு தான் இருக்கிறது. இதன் பைனலில் இந்தியாவுக்கு வெற்றி தேடித் தர வேண்டும் என்பதே என் கனவு. எதிரணியின் இலக்கை 'சேஸ்' செய்யும் வாய்ப்பு கிடைத்தால், இன்னும் சிறப்பாக இருக்கும். எனது கடைசி 'உலக' தொடர் என்பதால், கோப்பை வெல்வது மிகவும் முக்கியம்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us