sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

கிரிக்கெட்டில் கோடிகள் கொட்டுது பாரு... * தவிக்கும் மற்ற விளையாட்டு நட்சத்திரங்கள்

/

கிரிக்கெட்டில் கோடிகள் கொட்டுது பாரு... * தவிக்கும் மற்ற விளையாட்டு நட்சத்திரங்கள்

கிரிக்கெட்டில் கோடிகள் கொட்டுது பாரு... * தவிக்கும் மற்ற விளையாட்டு நட்சத்திரங்கள்

கிரிக்கெட்டில் கோடிகள் கொட்டுது பாரு... * தவிக்கும் மற்ற விளையாட்டு நட்சத்திரங்கள்


ADDED : ஜூலை 12, 2024 11:00 PM

Google News

ADDED : ஜூலை 12, 2024 11:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்தியாவில் கிரிக்கெட் வீரர்கள் கோடிகளில் புரள்கின்றனர். பாட்மின்டன், தடகளம் உள்ளிட்ட மற்ற விளையாட்டுகளில் சாதிப்பவர்கள் நிலை பரிதாபமாக உள்ளது.

பார்படாசில் நடந்த 9வது 'டி-20' உலக கோப்பை பைனலில் அசத்திய இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது. தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு டில்லியில் மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. மும்பையில் திறந்தவெளி பஸ் பேரணி, வான்கடே மைதானத்தில் விழா என திரும்பிய பக்கமெல்லாம் கொண்டாட்டங்கள் களை கட்டின.

'டி-20' உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் பரிசாக ரூ. 20 கோடி தான் வழங்கப்பட்டது. ஆனால், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) பல மடங்கு உயர்த்தி ரூ. 125 கோடி பரிசு வழங்கியது. கடனில் தத்தளிக்கும் மஹாராஷ்டிரா அரசு, தேர்தலை கணக்கில் கொண்டு ரூ.11 கோடி பரிசு அறிவித்தது.

உலகின் பணக்கார விளையாட்டு அமைப்பான பி.சி.சி.ஐ.,, கோடிகளை வாரி வழங்குவதற்கு வளமான வருமானம் முக்கிய காரணம். இந்தியாவில் நடக்கும் சர்வதேச, உள்ளூர் போட்டி ஒளிபரப்பு உரிமம் (2023, செப். - 2028 மார்ச்) மூலம் ரூ. 5,963 கோடி, ஐ.பி.எல்., ஒளிபரப்பு உரிமம் மூலம் (2023-27) ரூ. 48,390 கோடி கிடைத்தது. இப்படி கோடிகள் தாராளமாக கிடைப்பதால், வீரர்களுக்கு ஏராளமான பரிசு வழங்குகிறது. ஐ.பி.எல்., அணிகளும் அதிக சம்பளம் தருகின்றன.

இந்தியாவில் மற்ற விளையாட்டுகளில் சாதிப்பவர்களுக்கு போதிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. பல கோடி பரிசு கொடுப்பதில்லை என முன்னணி வீரர், வீராங்கனைகளே முணுமுணுக்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

வருமானம் அமோகம்

பி.சி.சி.ஐ., ஒப்பந்தப்படி (2024) லோகேஷ் ராகுலுக்கு ரூ. 5 கோடி சம்பளம். லக்னோ அணியோ இவருக்கு ரூ. 17 கோடி வழங்கியது. சஞ்சு சாம்சனுக்கு பி.சி.சி.ஐ., சம்பளம் ரூ. 1 கோடி. இவருக்கு ராஜஸ்தான் அணி ரூ. 14 கோடி கொடுத்தது.

* ஒரு சீசனில் 75 சதவீதத்திற்கும் மேல் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு, ஊக்கத் தொகையாக ரூ.45 லட்சம் வழங்கப்படும். ஒருவர் ஆண்டில் 10 டெஸ்ட் விளையாடினால், ஊக்க தொகையாக ரூ. 4.50 கோடி+ சம்பளம் 1.5 கோடி (ஒரு போட்டிக்கு ரூ. 15 லட்சம் வீதம்) கிடைக்கும். ஒருநாள் போட்டிக்கு ரூ. 6 லட்சம், 'டி-20' போட்டிக்கு ரூ. 3 லட்சம் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய நட்சத்திரங்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 2 லட்சம் தான் சம்பளம் தரப்படுகிறது.

ஏன் இந்த பாகுபாடு

பாட்மின்டன், தடகளம் போன்ற மற்ற விளையாட்டுகளில் பங்கேற்கும் இந்திய நட்சத்திரங்களுக்கு போதிய ஊக்கத் தொகை கிடைப்பதில்லை. டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு ரூ. ஒரு கோடி, வெள்ளி வென்ற மீராபாய் சானு (பளுதுாக்குதல்), ரவி குமாருக்கு (மல்யுத்தம்) தலா ரூ. 50 லட்சம், வெண்கலம் கைப்பற்றிய சிந்து (பாட்மின்டன்), லவ்லினா (குத்துச்சண்டை), பஜ்ரங் புனியாவுக்கு (மல்யுத்தம்) தலா ரூ. 25 லட்சம், வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணியினருக்கு பி.சி.சி.ஐ., சார்பில் ரூ. 1.25 கோடி மட்டும் பரிசாக வழங்கப்பட்டது.

1983ல் ரூ. 25,000

கபில் தேவ் தலைமையில் இந்திய அணி 1983ல் முதன் முதலாக உலக கோப்பை (60 ஓவர்) வென்றது. பி.சி.சி.ஐ., சார்பில் வீரர்களுக்கு தலா ரூ. 25,000 பரிசு வழங்கப்பட்டது. பின் பாடகி லாதா மங்கேஷ்கர் இசைக்கச்சேரி மூலம் கிடைத்த நிதியில் இருந்து, ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ. 1 லட்சம் கூடுதலாக கொடுக்கப்பட்டது.

* 2007ல் முதல் 'டி-20' உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு பி.சி.சி.ஐ., ரூ. 12 கோடி வழங்கியது.

* 2011ல் தோனி தலைமையில் இந்தியா இரண்டாவது முறையாக உலக கோப்பை (50 ஓவர்) வென்றது. ஒவ்வொரு வீரருக்கும் ரூ. 2 கோடி பி.சி.சி.ஐ., வழங்கியது.

* 2013ல் சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 1 கோடி வழங்கப்பட்டது.

* 17 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் 'டி-20' உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு பி.சி.சி.ஐ., சார்பில் ரூ. 125 கோடி பரிசு. வீரர்கள், பயிற்சியாளர் டிராவிட் என 16 பேருக்கு தலா ரூ. 5 கோடி கிடைத்தது. மற்ற பயிற்சியாளர்கள், தேர்வுக்குழுவினருக்கும் கோடிகள் கிடைத்தன.

ஸ்டார்க் சம்பளம் ரூ. 24.75 கோடி

ஒலிம்பிக் பயிற்சிக்கு ரூ. 17.9 கோடி

ஐ.பி.எல்., ஏலத்தில் (2024) ஸ்டார்க்கை (ஆஸி.,), கோல்கட்டா அணி ரூ. 24.75 கோடிக்கு வாங்கியது. அதே நேரத்தில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் இந்திய நட்சத்திரங்களின் பயிற்சிக்கு வெறும் ரூ. 17.9 கோடி செலவிடப்படுகிறது. தடகளத்துக்கு அதிகபட்சம் ரூ. 6.25 கோடி செலவாகிறது. பாட்மின்டன் (ரூ. 5.77 கோடி), துப்பாக்கிசுடுதல் (ரூ. 3.83 கோடி), டென்னிஸ் (ரூ. 1.57 கோடி), மல்யுத்தம் (ரூ. 55 லட்சம்), பளுதுாக்குதல் (ரூ. 42 லட்சம்), குத்துச்சண்டை (ரூ. 36 லட்சம்), வில்வித்தை (ரூ. 20 லட்சம்), நீச்சல் (ரூ. 15 லட்சம்), குதிரையேற்றத்துக்கு (ரூ. 7 லட்சம்) குறைவான தொகை வழங்கப்படுகின்றன.

பயிற்சிக்காக டென்னிஸ் வீரர் போபண்ணாவுக்கு ரூ. 1.03 கோடி, ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு ரூ. 48.76 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us