/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கார் விபத்தில் சிக்கிய முஷீர் கான் * கழுத்து எலும்பு முறிவு
/
கார் விபத்தில் சிக்கிய முஷீர் கான் * கழுத்து எலும்பு முறிவு
கார் விபத்தில் சிக்கிய முஷீர் கான் * கழுத்து எலும்பு முறிவு
கார் விபத்தில் சிக்கிய முஷீர் கான் * கழுத்து எலும்பு முறிவு
ADDED : செப் 28, 2024 11:16 PM

லக்னோ: கார் விபத்தில் சிக்கிய மும்பை 'ஆல்-ரவுண்டர்' முஷீர் கானின் கழுத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இவர் குணமடைய 3 மாதம் தேவைப்படலாம்.
இந்திய அணி பேட்டர் சர்ரபாஸ் கானின் தம்பி முஷீர் கான், 19. உள்ளூர் போட்டிகளில் ரன் மழை பொழிந்தார். முதல் தர கிரிக்கெட்டில் 15 இன்னிங்சில் 3 சதம் உட்பட 716 ரன் குவித்துள்ளார். 19 வயதுக்கு உட்பட்ட உலக கோப்பை தொடரிலும் முத்திரை பதித்தார். சமீபத்திய துலீப் டிராபி போட்டியில் 181 ரன் (எதிர், இந்தியா 'ஏ') எடுத்து இந்தியா 'பி' அணியின் வெற்றிக்கு கைகொடுத்தார். அடுத்து மும்பை, 'ரெஸ்ட் ஆப் இந்தியா' அணிகள் மோதும் இரானி கோப்பை தொடரில் (அக். 1-5, லக்னோ, உ.பி.,) சாதிக்க காத்திருந்தார்.
சாலையில் விபத்து
இத்தொடரில் பங்கேற்பதற்காக உ.பி.,யின் அஜாம்கரில் இருந்து லக்னோவுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ்வே சாலை நடுவே இருந்த 'டிவைடர்' மீது திடீரென மோதிய கார், கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் முஷீர் கானுக்கு கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டது. உடன் சென்ற தந்தை நவுஷத் கான் லேசான காயத்துடன் தப்பினார்.
லக்னோவில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முஷீர் கானின் உடல்நிலை சீராக உள்ளது.
டாக்டர் போலா சிங் கூறுகையில்,''முஷீர் கான் ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டார். எலும்பியல் துறையின் இயக்குநர் தர்மேந்தர் சிங் தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளிக்கின்றனர்,''என்றார்.
பி.சி.சி.ஐ., கண்காணிப்பு
மும்பை கிரிக்கெட் சங்கம் (எம்.சி.ஏ.,) வெளியிட்ட செய்தியில்,'முஷீர் கான் சுயநினைவுடன் உள்ளார். கழுத்து எலும்பு முறிவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றி பி.சி.சி.ஐ., எம்.சி.ஏ., மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகின்றனர். பயணம் செய்யும் அளவுக்கு உடல்நிலை தேறிய பின், விமானம் மூலம் மும்பைக்கு அழைத்து வரப்படுவார். பின் இவர் குணமடைய தேவைப்படும் காலம் பற்றி ஆய்வு செய்யப்படும்,''என்றார்.
முஷீர் கான் குணமடைய குறைந்தது மூன்று மாதம் தேவைப்படலாம். இதனால் இரானி கோப்பை, ரஞ்சி கோப்பை தொடரின் சில போட்டிகளில் இவரால் பங்கேற்க முடியாது.
மீண்டும் சோகம்
கடந்த 2022ல் கார் விபத்தில் சிக்கிய கீப்பர், பேட்டர் ரிஷாப் பன்ட் படுகாயமடைந்தார். மனஉறுதியுடன் மீண்ட இவர், தற்போதைய வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார். இவரை போல முஷீர் கானும் கார் விபத்தில் காயம் அடைந்திருப்பது இந்திய கிரிக்கெட்டில் மீண்டும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.