/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
நமீபியாவிடம் வீழ்ந்த தென் ஆப்ரிக்கா
/
நமீபியாவிடம் வீழ்ந்த தென் ஆப்ரிக்கா
ADDED : அக் 11, 2025 11:03 PM

விண்ட்ஹோக்: சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நமீபியா அணி, முதன் முறையாக தென் ஆப்ரிக்காவை வென்றது. நேற்று நடந்த 'டி-20' போட்டியில் 4 விக்கெட்டில் வெற்றி பெற்றது.
நமீபியா சென்ற தென் ஆப்ரிக்க அணி ஒரு 'டி-20' போட்டியில் பங்கேற்றது. விண்ட்ஹோக்கில் நடந்த போட்டியில், சர்வதேச அரங்கில் இரு அணிகளும் முதன் முறையாக மோதின. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்கா பேட்டிங் செய்தது.
தென் ஆப்ரிக்க அணிக்கு பிரிட்டோரியஸ் (22), குயின்டன் டி காக் (1) ஜோடி துவக்கம் தந்தது. ஸ்மித் (31) சற்று உதவினார். கேப்டன் டோனோவன் பெரெய்ரா 4 ரன் எடுத்தார். தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 134/8 ரன் மட்டும் எடுத்தது.
நமீபிய அணிக்கு ஸ்டீன்கேம்ப் (13), பிரைலின்க் (7), ஜான் நிகோல் (7) என 'டாப்-3' பேட்டர்கள் ஏமாற்றினர். கேப்டன் எராஸ்மஸ் (21), ஸ்மிட் (13), குருகெர் (18) உதவினர். கடைசி ஓவரில் 11 ரன் தேவைப்பட்டன. சைம்லைன் வீசிய 20 வது ஓவரில் முதல் 5 பந்தில் 10 ரன் (6, 1, 2, 1, 0) எடுக்கப்பட்டன. கடைசி பந்தில் கிரீன் பவுண்டரி அடிக்க, நமீபிய அணி 10 ஓவரில் 138/6 ரன் எடுத்து, 'திரில்' வெற்றி பெற்றது.