/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
வரலாறு படைத்தது நேபாளம் * வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது
/
வரலாறு படைத்தது நேபாளம் * வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது
வரலாறு படைத்தது நேபாளம் * வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது
வரலாறு படைத்தது நேபாளம் * வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது
ADDED : செப் 28, 2025 11:28 PM

சார்ஜா: இருமுறை 'டி-20' உலக சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வரலாறு படைத்தது நேபாள அணி.
வெஸ்ட் இண்டீஸ், நேபாள அணிகள் மோதும் 3 போட்டி கொண்ட 'டி-20' தொடர் சார்ஜாவில் நடக்கிறது. சர்வதேச அரங்கில் இரு அணிகள் முதன் முறையாக மோதிய போட்டியில் 'டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் அகியல் ஹொசெய்ன் பீல்டிங் தேர்வு செய்தார். 4 அறிமுக வீரர்கள் உட்பட இரண்டாம் தர வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது.
நேபாள அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. 3.1 ஓவரில் இரு துவக்க வீரர்களும் (குஷால் 6, ஆசிப் 3) அவுட்டாகினர். 'பவர் பிளே' ஓவர் முடிவில் 2 பவுண்டரி மட்டும் அடித்த நேபாளம் 34/2 ரன் மட்டும் எடுத்தது. குஷால் மல்லா 30, ரோகித் 38 ரன் எடுத்து கைகொடுத்தனர். 20 ஓவர் முடிவில் நேபாள அணி 148/8 ரன் எடுத்தது.
அதிர்ச்சி தோல்வி
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு, முதல் பந்தில் பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் துவக்கிய கைல் மேயர்ஸ் (5) ரன் அவுட்டானார். அகஸ்தே (15), ஆன்ட்ரூ (5), ஆமிர் (19) கைவிட, வெஸ்ட் இண்டீஸ் 10 ஓவரில் 56/4 ரன் மட்டும் எடுத்தது. கார்டி 16, ஜேசன் ஹோல்டர் 5 என இருவரும் ஏமாற்ற, 79/6 என திணறியது.
கடைசி 30 பந்தில் வெற்றிக்கு 70 ரன் தேவைப்பட்டன. நவின் 22, ஹொசெய்ன் 18 ரன் எடுத்தனர். கடைசி பந்தில் பேபியன் (19) அவுட்டானார். வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 129/9 ரன் மட்டும் எடுத்தது.
சர்வதேச அரங்கில் உறுப்பு அணியான நேபாளம், ஐ.சி.சி., முழு உறுப்பினர் அந்தஸ்து பெற்ற அணியை (வெ.இண்டீஸ்) முதன் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்தது. முன்னதாக 2014ல் உறுப்பு அணியாக இருந்த ஆப்கானிஸ்தான் அணியை வென்றது.