/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பெர்குசன் 'ஹாட்ரிக்' * நியூசிலாந்து 'திரில்' வெற்றி
/
பெர்குசன் 'ஹாட்ரிக்' * நியூசிலாந்து 'திரில்' வெற்றி
பெர்குசன் 'ஹாட்ரிக்' * நியூசிலாந்து 'திரில்' வெற்றி
பெர்குசன் 'ஹாட்ரிக்' * நியூசிலாந்து 'திரில்' வெற்றி
ADDED : நவ 11, 2024 12:33 AM

தம்புலா: பெர்குசன் 'ஹாட்ரிக்' கைகொடுக்க, நியூசிலாந்து அணி 5 ரன் வித்தியாசத்தில், 'திரில்' வெற்றி பெற்றது.
இலங்கை சென்ற நியூசிலாந்து அணி, 3 போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இலங்கை வென்றது. இரண்டாவது போட்டி நேற்று தம்புலாவில் நடந்தது. 'டாஸ்' வென்ற இலங்கை, பீல்டிங் தேர்வு செய்தது.
ஹசரங்கா 'நான்கு'
நியூசிலாந்து அணிக்கு வில் யங் (30), கேப்டன் சான்ட்னர் (19), கிளார்க்சன் (24) இரட்டை இலக்க ரன் கடந்து ஆறுதல் தந்தனர். ராபின்சன் (0), சாப்மென் (2), பிலிப்ஸ் (4), பிரேஸ்வெல் (0) என யாரும் ஒற்றை இலக்க ரன்னை தாண்டவில்லை. நியூசிலாந்து அணி 19.3 ஓவரில் 108 ரன்னுக்கு சுருண்டது. இலங்கையின் ஹசரங்கா 4, பதிரானா 3 விக்கெட் சாய்த்தனர்.
பெர்குசன் அபாரம்
இலங்கை அணிக்கு நிசங்கா, குசல் மெண்டிஸ் (2) ஜோடி மோசமான துவக்கம் தந்தது. போட்டியின் 6வது ஓவரை வீசிய பெர்குசன், கடைசி பந்தில் குசல் பெரேராவை (3) அவுட்டாக்கினார். அடுத்து 8வது ஓவரின் முதல் இரு பந்தில் கமிந்து மெண்டிஸ் (1), அசலங்காவை (0) அவுட்டாக்கி, 'ஹாட்ரிக்' விக்கெட் சாய்த்து அசத்தினார். சர்வதேச 'டி-20' ல் 64வது 'ஹாட்ரிக்' ஆனது.
பிலிப்ஸ் வீசிய கடைசி 6 பந்தில் 8 ரன் தேவைப்பட்டன. 2, 3வது பந்தில் நிசங்கா (52), பதிரானா (0), 5வது பந்தில் தீக்சனா (14) அவுட்டாகினர். இலங்கை அணி 19.5 ஓவரில் 103 ரன்னுக்கு சுருண்டது. 5 ரன்னில் நியூசிலாந்து 'திரில்' வெற்றி பெற்றது. பெர்குசன் 3, பிலிப்ஸ் 3 விக்கெட் சாய்த்தனர். தொடர் 1-1 என சமனில் உள்ளது.