/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பாக்., பயிற்சியாளர் கிறிஸ்டன் விலகல்
/
பாக்., பயிற்சியாளர் கிறிஸ்டன் விலகல்
ADDED : அக் 28, 2024 07:02 PM

கராச்சி: பாகிஸ்தான் அணி பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார் கிறிஸ்டன்.
தென் ஆப்ரிக்க முன்னாள் வீரர் கிறிஸ்டன் 56. இவரது பயிற்சியில், இந்திய அணி, கடந்த 2011ல் உலக கோப்பை (50 ஓவர்) கைப்பற்றியது. கடந்த ஏப்., மாதம் பாகிஸ்தான் ஒருநாள், 'டி-20' அணி பயிற்சியாளராக, 2 ஆண்டு ஒப்பந்தத்தில் நியமிக்கப்பட்டார். அடுத்து நடந்த 'டி-20' உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான், லீக் சுற்றுடன் நடையை கட்டியது.
டெஸ்ட் அணி பயிற்சியாளராக கில்லஸ்பி (ஆஸி.,) உள்ளார். இருவருக்கும் விரிசல் ஏற்பட்டுள்ளது. தவிர, அணித் தேர்வில் பயிற்சியாளர் அதிகாரத்தை பறிக்க, பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) முடிவு செய்தது. 'இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் பங்கேற்ற பாகிஸ்தான் வீரர்கள் தேர்வில், தனது அனுமதி பெறவில்லை,' என கில்லஸ்பி தெரிவித்து இருந்தார்.
ஆனால் கிறிஸ்டன் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தார். தற்போது ஆஸ்திரேலிய தொடருக்கான (ஒருநாள், 'டி-20') அணித் தேர்வில் தனது ஆலோசனையை கேட்க வேண்டும் என விரும்பினார் கிறிஸ்டன். மாறாக கிறிஸ்டன் தென் ஆப்ரிக்காவில் உள்ள நிலையில், ரிஸ்வான் தலைமையிலான அணி அறிவிக்கப்பட்டது.
வேறு வழியில்லாத நிலையில், ஆறு மாதம் மட்டும் ஆன நிலையில் பயிற்சியாளர் பதவியில் இருந்து உடனடியாக விலகுவதாக அறிவித்தார் கிறிஸ்டன். இதனால் ஆஸ்திரேலிய தொடரில் பயிற்சியாளராக செயல்படுமாறு, கில்லஸ்பியை பி.சி.பி., கேட்டுக் கொண்டுள்ளது.