/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தென் ஆப்ரிக்காவிடம் வீழ்ந்தது பாகிஸ்தான்
/
தென் ஆப்ரிக்காவிடம் வீழ்ந்தது பாகிஸ்தான்
ADDED : டிச 11, 2024 10:45 PM

டர்பன்: முதல் 'டி-20' போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 11 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி டர்பனில் நடந்தது. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
மில்லர் அபாரம்
தென் ஆப்ரிக்க அணிக்கு துவக்கத்தில் ஹென்ரிக்ஸ் (8), துசென் (0), பிரீட்ஸ்கே (8) ஏமாற்றினர். கேப்டன் கிளாசன் (12), டொனோவன் (7) நிலைக்கவில்லை. பின் டேவிட் மில்லர், ஜார்ஜ் லிண்டே ஜோடி சேர்ந்து அணிக்கு கைகொடுத்தனர். அரைசதம் அடித்த மில்லர், 40 பந்தில் 80 ரன் விளாசினார்.
லிண்டே 24 பந்தில் 48 ரன் எடுத்தார். தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 183/9 ரன் எடுத்தது. பாகிஸ்தானின் ஷகீன் அப்ரிதி, அப்ரார் அகமது தலா 3 விக்கெட் சாய்த்தனர்.
லிண்டே கலக்கல்
பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் ரிஸ்வான் (62), சைம் அயுப் (31) கைகொடுத்தனர். தயாப் தாஹிர் 18 ரன் எடுத்தார். மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்னை தாண்டவில்லை. 20 ஓவரில் 172/8 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. தென் ஆப்ரிக்காவின் லிண்டே அதிகபட்சம் 4 விக்கெட் சாய்த்து, ஆட்ட நாயகன் ஆனார். தொடரில் தென் ஆப்ரிக்கா 1-0 என முன்னிலை பெற்றது.