/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஜிம்பாப்வேயை வென்றது பாக்., * சதம் விளாசினார் அயூப்
/
ஜிம்பாப்வேயை வென்றது பாக்., * சதம் விளாசினார் அயூப்
ஜிம்பாப்வேயை வென்றது பாக்., * சதம் விளாசினார் அயூப்
ஜிம்பாப்வேயை வென்றது பாக்., * சதம் விளாசினார் அயூப்
ADDED : நவ 26, 2024 11:05 PM

புலவாயோ: இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது.
ஜிம்பாப்வே சென்றுள்ள பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஜிம்பாப்வே வென்றது. இரண்டாவது போட்டி நேற்று புலவாயோவில் நடந்தது. 'டாஸ்' வென்ற ஜிம்பாப்வே, பேட்டிங் தேர்வு செய்தது.
ஜிம்பாப்வே அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. தியான் (33), கேப்டன் எர்வின் (18), சீன் வில்லியம்ஸ் (31) கைகொடுத்தனர். சீனியர் சிக்கந்தர் ராஜா, 17 ரன் எடுத்து அப்ரார் பந்தில் வீழ்ந்தார். மற்ற வீரர்கள் ஏமாற்ற, ஜிம்பாப்வே அணி 32.3 ஓவரில் 145 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தானின் அப்ரார் அகமது 4, சல்மான் ஆஹா 3 விக்கெட் சாய்த்தனர்.
அயூப் விளாசல்
எளிய இலக்கைத் துரத்திய பாகிஸ்தான் அணிக்கு சைம் அயூப், அப்துல்லா சபிக் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. அயூப் பவுண்டரி மழை பொழிந்தார். 53வது பந்தில், ஒருநாள் அரங்கில் தனது முதல் சதம் விளாசினார் அயூப். பாகிஸ்தான் 18.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 148 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அயூப் (113 ரன், 62 பந்து, 3X6 17X4), சபிக் (32) அவுட்டாகாமல் இருந்தனர். தொடர் 1-1 என சமனில் உள்ளது.

