/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ரஞ்சி கோப்பை தொடர் துவக்கம் * 38 அணிகள் பங்கேற்பு
/
ரஞ்சி கோப்பை தொடர் துவக்கம் * 38 அணிகள் பங்கேற்பு
ADDED : அக் 14, 2025 10:41 PM

பெங்களூரு: இந்தியாவின் முன்னணி முதல் தர தொடர் ரஞ்சி கோப்பை. இதன் 91 வது சீசன் இன்று நாடு முழுவதும் துவங்குகிறது. 2026, பிப்., 28ல் பைனல் நடக்கும். 'எலைட்' பிரிவில் 32 (4 குரூப்), 'பிளேட்' பிரிவில் 6 என மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடம் பெறும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.
ரிஷாப் வருகை
கடந்த இங்கிலாந்து தொடரில் வோக்ஸ் பந்தில் காயமடைந்த விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட், மீண்டுள்ளார். இவர் டில்லி அணியில் இடம் பெறவில்லை. எனினும், அக். 25ல் துவங்கும் இரண்டாவது கட்ட போட்டியில், ஹிமாச்சல பிரதேச அணிக்காக விளையாடலாம்.
அடுத்து இந்திய மண்ணில் நடக்க உள்ள (நவ. 14ல் துவக்கம்), உலக சாம்பியன் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராக, ரிஷாப்பிற்கு இப்போட்டி கைகொடுக்கும்.
தவிர, இத்தொடரில் அதிக முறை கோப்பை வென்ற மும்பை, 43 வது பட்டம் வெல்ல முயற்சிக்கலாம். நடப்பு சாம்பியன் விதர்பா, கடந்த சீசனில் பைனலுக்கு முன்னேறிய கேரளா, காலிறுதியில் பங்கேற்ற தமிழகம், ஹரியானா அணிகளும் கோப்பை வெல்ல போராட காத்திருக்கின்றன.
இன்று சவுராஷ்டிரா-கர்நாடகா, கேரளா-மஹாராஷ்டிரா மோதல் உட்பட மொத்தம் 19 போட்டிகள் துவங்குகின்றன.