/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
மூன்று விக்கெட் சாய்த்தார் வித்யூத் * ரஞ்சி கோப்பை போட்டியில்
/
மூன்று விக்கெட் சாய்த்தார் வித்யூத் * ரஞ்சி கோப்பை போட்டியில்
மூன்று விக்கெட் சாய்த்தார் வித்யூத் * ரஞ்சி கோப்பை போட்டியில்
மூன்று விக்கெட் சாய்த்தார் வித்யூத் * ரஞ்சி கோப்பை போட்டியில்
ADDED : நவ 18, 2025 10:53 PM

கோவை: ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் முதல் இன்னிங்சில் தமிழக அணி 455 ரன் குவித்தது.
கோவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லுாரி மைதானத்தில் நடக்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 'எலைட் ஏ' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், உ.பி., அணிகள் மோதுகின்றன. தமிழக அணி முதல் இன்னிங்சில் 455 ரன் எடுத்தது. 282/5 ரன் எடுத்திருந்தது. இரண்டாவது நாள் முடிவில் உ.பி., அணி முதல் இன்னிங்சில் 87/1 ரன் எடுத்து, 368 ரன் பின்தங்கி இருந்தது.
நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. வித்யூத் சுழலில், அபிஷேக் 79 ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து அசத்திய இவர், ஆர்யன் (43), கேப்டன் கரண் சர்மாவை (11) வெளியேற்றினார். ஷிவம் மாவி 54 ரன் எடுத்தார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிங்கு சிங் அரைசதம் அடித்தார். மூன்றாவது நாள் முடிவில் உ.பி., அணி முதல் இன்னிங்சில் 339/6 ரன் எடுத்து, 116 ரன் பின்தங்கி இருந்தது. வித்யூத் 3 விக்கெட் சாய்த்தார். ரிங்கு சிங் (98), ஷிவம் சர்மா (18) அவுட்டாகாமல் இருந்தனர்.
மும்பை வான்கடேயில் நடக்கும் 'டி' பிரிவு லீக் போட்டியில் மும்பை அணி முதல் இன்னிங்சில் 630/5 ரன் எடுத்தது. புதுச்சேரி அணி, முதல் இன்னிங்சில் 132 ரன்னில் சுருண்டு 'பாலோ ஆன்' பெற்றது. 3வது நாள் முடிவில் 2வது இன்னிங்சில் 231/6 ரன் எடுத்து, இன்னிங்ஸ், 267 ரன் பின்தங்கி இருந்தது.
ஹூப்ளியில் நடந்த 'பி' பிரிவு போட்டியில் கர்நாடக அணி (547/8), சண்டிகர் அணியை (222, 140), இன்னிங்ஸ், 185 ரன்னில் வென்றது. புதிய சண்டிகரில் நடந்த போட்டியில் ('பி') மகாராஷ்டிரா அணி (350), பஞ்சாப்பை (151, 107), இன்னிங்ஸ், 92 ரன்னில் வீழ்த்தியது.

