/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பைனலில் ஈஸ்டர்ன் கேப் * எஸ்.ஏ.20 தொடரில்
/
பைனலில் ஈஸ்டர்ன் கேப் * எஸ்.ஏ.20 தொடரில்
ADDED : பிப் 07, 2025 10:58 PM

செஞ்சுரியன்: 'எஸ்.ஏ.20' கிரிக்கெட் தொடர் பைனலுக்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக முன்னேறியது ஈஸ்டர்ன் கேப் அணி.
தென் ஆப்ரிக்காவில் உள்ளூர் 'எஸ்.ஏ.20' கிரிக்கெட் தொடர் நடக்கிறது. தகுதிச்சுற்று 1ல் வெற்றி பெற்ற மும்பை கேப்டவுன் அணி முதன் முறையாக பைனலுக்கு முன்னேறியது. தகுதிச்சுற்று 2ல், நடப்பு சாம்பியன் ஐதராபாத் ஈஸ்டர்ன் கேப், தகுதிச்சுற்று 1ல் தோற்ற பார்ல் ராயல்ஸ் அணிகள் மோதின.
'டாஸ்' வென்ற ராயல்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது. பிரிட்டோரியஸ் (59), ஹெர்மான் (81) அரைசதம் அடித்தனர். கேப்டன் டேவிட் மில்லர் (6) ஏமாற்ற, ராயல்ஸ் அணி 20 ஓவரில் 175/4 ரன் எடுத்தது.
ஈஸ்டர்ன் கேப் அணிக்கு டோனி (78), அதிவேக துவக்கம் தந்தார். ஹெர்மான் (69), கேப்டன் மார்க்ரம் (11) ஜோடி அவுட்டாகாமல் அணியை வெற்றிக்கு கொண்டு சென்றது. ஈஸ்டர்ன் கேப் அணி 19.2 ஓவரில் 177/2 ரன் எடுத்து 8 விக்கெட்டில் வெற்றி பெற்றது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பைனலுக்குள் நுழைந்தது. 2023, 2024ல் கோப்பை வென்ற ஈஸ்டர்ன் கேப் அணி, இம்முறை மும்பை அணியை வென்றால் 'ஹாட்ரிக்' கோப்பை கைப்பற்றலாம்.

