/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தப்புமா வங்கதேச அணி * தென் ஆப்ரிக்கா ரன் குவிப்பு
/
தப்புமா வங்கதேச அணி * தென் ஆப்ரிக்கா ரன் குவிப்பு
ADDED : அக் 22, 2024 11:12 PM

மிர்பூர்: வங்கதேசம் சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி இரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் மிர்பூரில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் வங்கதேசம் 106/10 ரன்னுக்கு சுருண்டது. முதல் நாள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 140/6 ரன் எடுத்திருந்தது. வெர்ரேன் (18), முல்டர் (17) அவுட்டாகாமல் இருந்தனர்.
வெர்ரேன் சதம்
நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. வெர்ரேன், முல்டர் இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். 7 வது விக்கெட்டுக்கு 119 ரன் சேர்த்த போது, அரைசதம் அடித்த முல்டர் (54) அவுட்டானார். மறுபக்கம் வெர்ரேன் சதம் கடந்தார். பின் வரிசையில் பைடிட் 32 ரன் எடுத்து கைகொடுத்தார். கடைசியில் வெர்ரேன் (114) அவுட்டாக, தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 308 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
மீண்டும் திணறல்
பின், 202 ரன் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை துவக்கியது வங்கதேச அணி. ஷாத்மன் (1), மோமினுல் (0) இருவரும் ரபாடா வேகத்தில் வீழ்ந்தனர். கேப்டன் ஷான்டோ 23 ரன் எடுத்தார். இரண்டாவது நாள் முடிவில் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்சில் 101/3 ரன் எடுத்து, 101 ரன் பின்தங்கி இருந்தது. மகமதுல் (38), முஷ்பிகுர் (31) அவுட்டாகாமல் இருந்தனர்.