/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பவுமா மீண்டும் கேப்டன் * தென் ஆப்ரிக்க ஒருநாள் அணிக்கு...
/
பவுமா மீண்டும் கேப்டன் * தென் ஆப்ரிக்க ஒருநாள் அணிக்கு...
பவுமா மீண்டும் கேப்டன் * தென் ஆப்ரிக்க ஒருநாள் அணிக்கு...
பவுமா மீண்டும் கேப்டன் * தென் ஆப்ரிக்க ஒருநாள் அணிக்கு...
ADDED : நவ 21, 2025 10:51 PM

ஜோகனஸ்பர்க்: இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி, மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. போட்டிகள் ராஞ்சி (நவ. 30), ராய்ப்பூர் (டிச. 3), விசாகப்பட்டனத்தில் (டிச. 6) நடக்க உள்ளன. இதற்கான தென் ஆப்ரிக்க அணி அறிவிக்கப்பட்டது.
சமீபத்திய தொடரில் பங்கேற்காத பவுமா, மீண்டும் ஒருநாள் அணி கேப்டனாக நியமிக்கப்பட்டார். டெஸ்ட் தொடருக்காக பயிற்சியில் ஈடுபட்ட வேகப்பந்து வீச்சாளர் ரபாடா, விலா பகுதி காயம் சரியாகாத நிலையில் நாடு திரும்புகிறார்.
சமீபத்தில் ஓய்வு முடிவை திரும்ப பெற்ற குயின்டன் டி காக் சேர்க்கப்பட்டுள்ளார்.
அணி விபரம்:
பவுமா, பார்ட்மென், பிரீட்ஸ்கே, பிரவிஸ், பர்கர், குயின்டன் டி காக், ஜோர்ஜி, ஹெர்மான், யான்சென், மஹாராஜ், மார்க்ரம், லுங்கிடி, ரிக்கிள்டன், சுப்ராயென்.
நோர்க்யா வாய்ப்பு
இந்தியாவுக்கு எதிரான ஐந்து போட்டி கொண்ட 'டி-20' (டிச. 9, 11, 14, 17, 19) தொடரில் பங்கேற்கும் தென் ஆப்ரிக்க அணி அறிவிக்கப்பட்டது. கடந்த 'டி-20' உலக கோப்பை தொடருக்குப் பின் சர்வதேச போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த, வேகப்பந்து வீச்சாளர் நோர்க்யா சேர்க்கப்பட்டார்.
அணி விபரம்: மார்க்ரம் (கேப்டன்), பார்ட்மென், கார்பின், பிரவிஸ், குயின்டன் டி காக், ஜோர்ஜி, டோனோவன், ஹென்ரிக்ஸ், யான்சென், லிண்டே, மஹாராஜ், மபகா, மில்லர், லுங்கிடி, நோர்க்யா, ஸ்டப்ஸ்.

