sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

இந்திய அணியில் ரிஷாப், ஜெய்ஸ்வால் * ஒருநாள் தொடரில் எதிர்பார்ப்பு

/

இந்திய அணியில் ரிஷாப், ஜெய்ஸ்வால் * ஒருநாள் தொடரில் எதிர்பார்ப்பு

இந்திய அணியில் ரிஷாப், ஜெய்ஸ்வால் * ஒருநாள் தொடரில் எதிர்பார்ப்பு

இந்திய அணியில் ரிஷாப், ஜெய்ஸ்வால் * ஒருநாள் தொடரில் எதிர்பார்ப்பு


ADDED : நவ 19, 2025 11:10 PM

Google News

ADDED : நவ 19, 2025 11:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கவுகாத்தி: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரிஷாப் பன்ட், ஜெய்ஸ்வால் இடம் பெறுவர் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி, அடுத்து மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது.

முதல் போட்டி ராஞ்சியில் நவம்பர் 30ல் நடக்க உள்ளது. அடுத்த இரு போட்டிகள் டிசம்பர் 3, 6ல் ராய்ப்பூர், விசாகப்பட்டனத்தில் நடக்க உள்ளன. இதற்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

'இருவர்' காயம்

ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் பங்கேற்ற இந்திய அணியில் நான்கு மாற்றங்கள் இருக்கலாம். இந்திய அணி தற்போதைய கேப்டன் சுப்மன் கில், கழுத்து வலியால் அவதிப்படுகிறார். தவிர கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று வரும் இவருக்கு, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) ஓய்வு தர வாய்ப்புள்ளது.

துணைக் கேப்டன் ஸ்ரேயஷ் 30, ஆஸ்திரேலிய மண்ணில் 'கேட்ச்' செய்த போது, இடது விலா எலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. இவரது மண்ணீரலில் ஏற்பட்ட ரத்தக்கசிவு நிறுத்தப்பட்டது. எனினும் இவரது விஷயத்தில் பி.சி.சி.ஐ., 'ரிஸ்க்' எடுக்க விரும்பவில்லை.

மாற்று யார்

இதனால் தென் ஆப்ரிக்க ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில், ஸ்ரேயசிற்குப் பதில் திலக் வர்மா சேர்க்கப்படலாம். தற்போது தென் ஆப்ரிக்க 'ஏ' அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில், இவர், இந்திய 'ஏ' அணி கேப்டனாக செயல்பட்டார். தவிர 4 ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ளார்.

தற்போது மாற்று துவக்க வீரராக உள்ள ஜெய்ஸ்வால் 23, சுப்மன் இடம் பெறாத பட்சத்தில் ரோகித் சர்மாவுடன் இணைந்து இந்திய அணிக்கு துவக்கம் தரலாம். ஆஸ்திரேலிய தொடரில் ராகுலுக்கு மாற்று துவக்க வீரராக இருந்தார் விக்கெட் கீப்பர் துருவ் ஜுரெல். தற்போது ரிஷாப் பன்ட் 28, முழுமையாக மீண்டுள்ள நிலையில், ஒருநாள் அணியில் இடம் பெறுவது உறுதி. துருவ் இடம் பெறுவது சந்தேகம். பணிச்சுமையை குறைக்கும் வகையில் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு தரப்படலாம்.

தற்காலிக கேப்டன்

இந்திய ஒருநாள் அணிக்கு சுப்மனுக்குப் பதில், அணியின் சீனியர் வீரர் ராகுல், தற்காலிக கேப்டனாக செயல்பட வாய்ப்புள்ளது. ரோகித் சர்மா, கோலி அணியில் இருந்தாலும், அக்சர் படேல் மீண்டும் துணைக் கேப்டனாக தேர்வாகலாம். பவுலிங்கை பொறுத்தவரையில் பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கைகொடுத்த வருண் சக்ரவர்த்தி ஒருநாள் அணியில் சேர்க்கப்பட உள்ளார்.

உத்தேச அணி

கோலி, ரோகித், ஜெய்ஸ்வால், ராகுல், ரிஷாப் பன்ட், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, நிதிஷ் குமார், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ்.



கவுகாத்தியில் சுப்மன் கில்

இந்திய டெஸ்ட் அணி கேப்டன் சுப்மன் கில் 26. கோல்கட்டா டெஸ்ட் 2வது நாளில், ஹார்மர் வீசிய பந்தில் 'ஸ்வீப் ஷாட்' அடித்தார். அப்போது கழுத்து பகுதியில் பிடிப்பு ஏற்பட, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பின் 'டிஸ்சார்ஜ்' ஆன போதும் இன்னும் முழுமையாக மீண்டு வரவில்லை. இதனிடையே நேற்று கோல்கட்டாவில் இருந்து, இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக (நவ. 22-26), கவுகாத்தி சென்றார் சுப்மன். விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த போது, சாதாரணமாக காணப்பட்டார்.

போட்டி துவங்க இன்னும் இரண்டு நாள் உள்ள நிலையில் இவர், முழுமையாக மீண்டு விடுவார் என நம்பப்படுகிறது.

இவர் குறித்து பி.சி.சி.ஐ., செயலர் தேவஜித் சைகியா வெளியிட்ட அறிக்கையில்,' சுப்மனுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணி வீரர்களுடன் சுப்மனும் சென்றுள்ளார். பி.சி.சி.ஐ., மருத்துவ குழு தொடர்ந்து காண்காணித்து வருகிறது. இதன் அறிக்கைக்கு ஏற்ப, 2வது டெஸ்டில் பங்கேற்பது குறித்து தெரியவரும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us