ஸ்பெயின் உலக சாதனை * தொடர்ந்து 21 போட்டியில் வெற்றி
ஸ்பெயின் உலக சாதனை * தொடர்ந்து 21 போட்டியில் வெற்றி
ADDED : ஆக 17, 2026 11:08 PM

கெரவா: சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் வென்று ஸ்பெயின் அணி உலக சாதனை படைத்தது.
ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை 2028 தொடருக்கான ஐரோப்பிய பிரிவு தகுதிச்சுற்று நடக்கிறது. பின்லாந்தின் கெரவா நகரில் நடந்த போட்டியில் ஸ்பெயின், பின்லாந்து அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய பின்லாந்து 20 ஓவரில் 131/9 ரன் எடுத்தது. அடுத்து ஸ்பெயின் அணிக்கு யாசிர் அலி (40), டோய்லே (49) உதவ, 16.4 ஓவரில் 135/2 ரன் எடுத்து, 8 விக்கெட்டில் வெற்றி பெற்றது.
புதிய சாதனை
இதையடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற அணி என ஸ்பெயின் (21) சாதனை படைத்தது. அடுத்து நடந்த போட்டியில் இசல் ஆப் மென் அணியை சாய்த்தது ஸ்பெயின். தற்போது, கடந்த 2023, ஆக., முதல் தொடர்ந்து 22 'டி-20' போட்டியில் வென்றுள்ளது. முன்னதாக, 2003ல் பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, தொடர்ந்து 20 போட்டிகளில் (17 ஒருநாள்+3 டெஸ்ட்) வென்றிருந்தது. உகாண்டா (17 'டி-20') மூன்றாவதாக உள்ளது.
