ADDED : ஜூன் 23, 2026 11:44 PM

ஐதராபாத்: மாநில லீக் 'டி-20' ல் அதிவேக சதம் அடித்து சாதனை படைத்தார் அமன் ராவ் பெரலா.
தெலுங்கானாவில் மாநில 'டி-20' கிரிக்கெட் லீக் நடக்கிறது. ஐதராபாத்தில் நடந்த போட்டியில் வாரங்கல் வாரியர்ஸ், மேடக் பல்கான்ஸ் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய வாரங்கல் அணி கேப்டன் அமன் ராவ், 32 பந்தில் சதம் விளாசினார். இவர் 48 பந்தில் 142 ரன் (13 சிக்சர், 12 பவுண்டரி) எடுத்தார். வாரங்கல் அணி 20 ஓவரில் 258/7 ரன் குவித்தது.
அடுத்து களமிறங்கிய பல்கான்ஸ் அணிக்கு கேப்டனாக களமிறங்கிய இந்திய வீரர் திலக் வர்மா கைகொடுத்தார். 56 பந்தில் 136 ரன் (8 சிக்சர், 14 பவுண்டரி) குவிக்க, 19.4 ஓவரில் 259/7 ரன் எடுத்து, 3 விக்கெட்டில் வெற்றி பெற்றது.
வைபவ் சூர்யவன்ஷியின் ராஜஸ்தான் அணியில் இடம் பெற்றுள்ளார் அமன் ராவ் 22. 2026 ஏலத்தில் இவரை ரூ. 30 லட்சத்துக்கு வாங்கியுள்ளது. தற்போது மாநில அளவிலான லீக் 'டி-20' ல் அதிவேக சதம் அடித்த அமன், வரும் சீசனில் ராஜஸ்தான் அணியில் அறிமுகம் ஆகலாம்.
