/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பயிற்சியில் சூர்யகுமார் * ஆசிய கோப்பை தொடருக்கு 'ரெடி'
/
பயிற்சியில் சூர்யகுமார் * ஆசிய கோப்பை தொடருக்கு 'ரெடி'
பயிற்சியில் சூர்யகுமார் * ஆசிய கோப்பை தொடருக்கு 'ரெடி'
பயிற்சியில் சூர்யகுமார் * ஆசிய கோப்பை தொடருக்கு 'ரெடி'
ADDED : ஆக 05, 2025 10:42 PM

பெங்களூரு: இந்திய 'டி-20' அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் 34. ஐ.பி.எல்., தொடரின் 18வது சீசனில் மும்பை அணிக்காக விளையாடிய இவர் (717 ரன்), சிறந்த வீரருக்கான தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார். அடுத்து மும்பை பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்ற இவருக்கு வலது பக்க வயிற்றின் கீழ் பகுதியில் வலி ஏற்பட்டது. சோதனையில் 'ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா' பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து ஜெர்மனி சென்ற சூர்யகுமார், 'ஆப்பரேஷன்' செய்தார். பின், பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,), தேசிய அகாடமிக்கு திரும்பினார். இங்கு பி.சி.சி.ஐ., மருத்துவ குழு கண்காணிப்பில் காயத்தில் இருந்து மீண்டு வருகிறார்.
தற்போது சூர்யகுமார் தனது பயிற்சியை துவக்கியுள்ளார். விரைவில் முழுமையாக மீண்டு வரும்பட்சத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சில், செப்டம்பர் 9ல் துவங்க உள்ள ஆசிய கோப்பை 'டி-20' தொடரில் களமிறங்கலாம்.