/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
திலக் வர்மா 'ஹாட்ரிக்' சதம் * 'டி-20' அரங்கில் சாதனை
/
திலக் வர்மா 'ஹாட்ரிக்' சதம் * 'டி-20' அரங்கில் சாதனை
திலக் வர்மா 'ஹாட்ரிக்' சதம் * 'டி-20' அரங்கில் சாதனை
திலக் வர்மா 'ஹாட்ரிக்' சதம் * 'டி-20' அரங்கில் சாதனை
ADDED : நவ 23, 2024 10:56 PM

ராஜ்கோட்: 'டி-20' கிரிக்கெட்டில் 'ஹாட்ரிக்' சதம் அடித்த முதல் வீரர் என சாதனை படைத்தார் இந்தியாவின் திலக் வர்மா.
இந்தியாவில் சையது முஷ்தாக் அலி டிராபி 'டி-20' தொடர் நேற்று துவங்கியது. ராஜ்கோட்டில் நடந்த போட்டியில் ஐதராபாத், மேகாலயா அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணிக்கு தன்மே அகர்வால் (55), ராகுல் சிங் (0) ஜோடி துவக்கம் தந்தது. பின் வந்த திலக் வர்மா, 67 பந்தில் 151 ரன் (10X6, 14X4) குவித்து அவுட்டானார். ஒட்டுமொத்த 'டி-20' வரலாற்றில் 'ஹாட்ரிக்' சதம் விளாசிய முதல் வீரர். தவிர சையது முஷ்தாக் தொடரில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்த வீரர் ஆனார்.
ஐதராபாத் அணி 20 ஓவரில் 248/4 ரன் குவித்தது. இத்தொடரில் ஐதராபாத் அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் ஆனது. ஒட்டுமொத்த சையது முஷ்தாக் அலி தொடரில் இது நான்காவது அதிகபட்ச ஸ்கோராக உள்ளது. முதலிடத்தில் பஞ்சாப் (275/6 ரன், எதிர்-ஆந்திரா, 2023) உள்ளது.
அடுத்து களமிறங்கிய மேகாலயா அணி 15.1 ஓவரில் 69 ரன்னுக்கு சுருண்டது. ஐதராபாத் அணி 179 ரன்னில் வெற்றி பெற்றது.
முதல் வீரர்
சமீபத்திய தென் ஆப்ரிக்க 'டி-20' தொடரில் திலக் வர்மா, அடுத்தடுத்த போட்டியில் சதம் (107, 120) அடித்தார். நேற்று உள்ளூர் போட்டியில் 151 ரன் விளாச, ஒட்டுமொத்த 'டி-20' ல் 'ஹாட்ரிக்' சதம் விளாசிய முதல் வீரர் ஆனார்.
* இதற்கு முன் மெக்கியான் (பிரான்ஸ்), ரூசோவ் (தெ.ஆப்.,), பில் சால்ட் (இங்கிலாந்து), சாம்சன் (இந்தியா) தொடர்ந்து இரு சதம் அடித்ததே அதிகம்.
முதல் இந்திய வீரர்
'டி-20' வரலாற்றில் ஒரு இன்னிங்சில் 150 ரன்னுக்கும் மேல் எடுத்த முதல் இந்திய வீரர் ஆனார் திலக் வர்மா (151). முன்னதாக பெண்களுக்கான 'டி-20' டிராபி தொடரில் (2022), நாகலாந்து அணிக்காக விளையாடிய வீராங்கனை கிரண் நவ்கிரே, 162 ரன் எடுத்திருந்தார்.
தமிழகம் அபாரம்
இந்துாரில் நடந்த போட்டியில் தமிழகம், திரிபுரா மோதின. முதலில் களமிறங்கிய தமிழக அணிக்கு பாபா இந்திரஜித் (78), ஜெகதீசன் (50), கேப்டன் ஷாருக்கான் (31), விஜய் சங்கர் (38) கைகொடுக்க, 20 ஓவரில் 234/5 ரன் குவித்தது. திரிபுரா அணி 20 ஓவரில் 191/9 ரன் எடுத்து 43 ரன்னில் தோற்றது. தமிழகத்தின் வருண் சக்ரவர்த்தி, சாய் கிஷோர், விஜய் சங்கர், குர்ஜப்னீத் சிங் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.