/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
உர்வில் படேல் மீண்டும் சதம் * சையது முஷ்தாக் அலி தொடரில்...
/
உர்வில் படேல் மீண்டும் சதம் * சையது முஷ்தாக் அலி தொடரில்...
உர்வில் படேல் மீண்டும் சதம் * சையது முஷ்தாக் அலி தொடரில்...
உர்வில் படேல் மீண்டும் சதம் * சையது முஷ்தாக் அலி தொடரில்...
ADDED : டிச 03, 2024 11:23 PM

இந்துார்: சையது முஷ்தாக் 'டி-20' அரங்கில் இரண்டாவது சதம் அடித்தார் குஜராத் வீரர் உர்வில் படேல்.
இந்தியாவில் சையது முஷ்தாக் அலி டிராபி 'டி-20' தொடர் நடக்கிறது. இந்துாரில் நடந்த போட்டியில் குஜராத், உத்தரகாண்ட் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற குஜராத் பீல்டிங் தேர்வு செய்தது.
உத்தரகாண்ட் அணிக்கு குணால் சண்டேலா (43) கைகொடுத்தார். ரவிக்குமார் சமர்த் 39 பந்தில் 54 ரன் எடுத்தார். பின் வரிசை வீரர்கள் ஏமாற்ற, ஆதித்ய தாரே 24 பந்தில் 54 ரன் விளாசினார். உத்தரகாண்ட் அணி 20 ஓவரில் 182/7 ரன் எடுத்தது.
உர்வில் அபாரம்
பின் களமிறங்கிய குஜராத் அணிக்கு ஆர்யா தேசாய் (23), உர்வில் படேல் ஜோடி மின்னல் வேகத்தில் ரன் குவித்தது. சிக்சர் மழை பொழிந்த உர்வில், இத்தொடரில் இரண்டாவது சதம் அடித்தார். குஜராத் அணி 13.1 ஓவரில் 185/2 ரன் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சதம் விளாசிய உர்வில் (41 பந்து, 115 ரன், 11x6, 8x4), கேப்டன் அக்சர் படேல் (28) அவுட்டாகாமல் இருந்தனர்.
தமிழகம் ஏமாற்றம்
இந்துாரில் நடந்த மற்றொரு போட்டியில் தமிழகம், சவுராஷ்டிரா அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய சவுராஷ்டிரா அணி 20 ஓவரில் 235/5 ரன் எடுத்தது. தமிழக அணிக்கு பூபதி குமார் (65), ஜெகதீசன் (24), முகமது அலி (28) தவிர மற்ற வீரர்கள் கைவிட, 20 ஓவரில் 177/9 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. இதுவரை பங்கேற்ற 6 போட்டியில் 2ல் மட்டும் வென்ற தமிழகம், ஏறக்குறைய காலிறுதி வாய்ப்பை இழந்தது.
கோபால் 'ஹாட்ரிக்'
'பி' பிரிவில் நேற்று கர்நாடகா, பரோடா மோதின (இந்துார்). முதலில் களமிறங்கிய கர்நாடக அணி 20 ஓவரில் 169/8 ரன் எடுத்தது. பரோடா அணி 102/1 என இருந்தது. சுழலில் அசத்திய ஸ்ரேயாஸ் கோபால், தனது 11 வது ஓவரில் ஷாஷ்வத் (63), ஹர்திக் பாண்ட்யா (0), குர்னால் பாண்ட்யா (0) என வரிசையாக வீழ்த்தி, 'ஹாட்ரிக்' விக்கெட் சாய்த்தார். இருப்பினும் பரோடா அணி 18.5 ஓவரில் 172/6 ரன் எடுத்து 4 விக்கெட்டில் வெற்றி பெற்றது.