270 ரன் 'சேஸ்' செய்து சாதனை * 'டி-20' கிரிக்கெட்டில் அபாரம்
270 ரன் 'சேஸ்' செய்து சாதனை * 'டி-20' கிரிக்கெட்டில் அபாரம்
ADDED : ஜூலை 16, 2026 11:45 PM

ஆக்லண்ட்: 'டி-20' கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன்களை சேஸ் செய்து சாதனை படைத்தது வாஷிங்டன் அணி.
அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் (எம்.எல்.சி.,) தொடர் நடக்கிறது. ஆக்லண்டில் நடந்த முதல் 'எலிமினேட்டர்' போட்டியில் வாஷிங்டன் பிரீடம், மும்பை நியூயார்க் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய நியூயார்க் அணிக்கு நிக்கோலஸ் பூரன் (106), போலார்டு (64) கைகொடுத்தனர். 20 ஓவரில் 266/9 ரன் எடுக்கப்பட்டன.
அடுத்து களமிறங்கிய வாஷிங்டன் அணி, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் (ஆஸி.,), ஆன்ட்ரிஸ் கவுஸ் (132) ஜோடி கைகொடுத்தது. இருவரும் சதம் அடித்தனர். 3வது விக்கெட்டுக்கு 241 ரன் சேர்க்க வெற்றி எளிதானது. வாஷிங்டன் அணி 18.4 ஓவரில் 270/4 ரன் எடுத்து 6 விக்கெட்டில் வெற்றி பெற்றது. ஸ்மித் (110) அவுட்டாகாமல் இருந்தார்.
புதிய சாதனை
நேற்று 270 ரன் எடுத்து வெற்றி பெற்ற வாஷிங்டன் அணி, 'டி-20' வரலாற்றில், அதிகபட்ச 'சேஸ்' செய்து சாதனை படைத்தது. முன்னதாக
கிரிக்கெட் லீக் தொடரில் (இந்தியா), பஞ்சாப் அணி 265/4 ரன் 'சேஸ்' செய்து (எதிரணி-டில்லி, 2026) இருந்தது.
241 ரன்
'டி-20'ல் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன் சேர்த்த ஜோடி என ஸ்மித்-கவுஸ் உலக சாதனை படைத்தனர். முன்னதாக 2016, லீக் தொடரில் கோலி-டிவிலியர்ஸ் இணைந்து 229 ரன் (எதிர்-குஜராத்) சேர்த்தனர்.
