/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
3 ரன்னில் நழுவிய தமிழக வாய்ப்பு * கூச் பெஹார் டிராபியில்...
/
3 ரன்னில் நழுவிய தமிழக வாய்ப்பு * கூச் பெஹார் டிராபியில்...
3 ரன்னில் நழுவிய தமிழக வாய்ப்பு * கூச் பெஹார் டிராபியில்...
3 ரன்னில் நழுவிய தமிழக வாய்ப்பு * கூச் பெஹார் டிராபியில்...
ADDED : ஜன 12, 2026 11:20 PM

சாகர்: 'கூச் பெஹார் டிராபி' அரையிறுதியில் 3 ரன்னில் வெற்றியை நழுவவிட்ட தமிழக அணி, பைனல் வாய்ப்பை இழந்தது.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான 'கூச் பெஹார் டிராபி' (4 நாள் போட்டி) நடத்தப்படுகிறது. சாகரில் உள்ள மத்திய பிரதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த அரையிறுதியில் 'நடப்பு சாம்பியன்' தமிழகம், மத்திய பிரதேசம் அணிகள் மோதின.
முதல் இன்னிங்சில் மத்திய பிரதேசம் 320, தமிழகம் 193 ரன் எடுத்தன. 3வது நாள் முடிவில், மத்திய பிரதேச அணி இரண்டாவது இன்னிங்சில் 214/8 ரன் எடுத்து, 341 ரன் முன்னிலை பெற்றிருந்தது.
நேற்று 4வது, கடைசி நாள் ஆட்டம் நடந்தது. மத்திய பிரதேச அணி 245 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அர்னாவ் (66) அவுட்டாகாமல் இருந்தார். தமிழகத்தின் கிஷோர் 5 விக்கெட் சாய்த்தார்.
நழுவிய 'பைனல்'
தமிழக அணி இரண்டாவது இன்னிங்சில் 75 ஓவரில் 373 ரன் எடுக்க வேண்டும் என்ற கடின இலக்குடன் களமிறங்கியது. 3வது விக்கெட்டுக்கு இணைந்த குஷ் பர்தியா, பரத் ஜோடி, 199 ரன் சேர்த்தது. குஷ் 141 ரன் எடுத்தார். பரத் தன் பங்கிற்கு சதம் அடித்தார். கடைசி நேரத்தில் ஷவின் (24) ரன் அவுட்டாக, தமிழக அணி இரண்டாவது இன்னிங்சில் 75 ஓவரில், 370/5 ரன் மட்டும் எடுத்தது. பரத் (152) அவுட்டாகாமல் இருந்தார்.
இதையடுத்து போட்டி 'டிரா' ஆனதாக அறிவிக்கப்பட, முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் மத்திய பிரதேச அணி பைனலுக்கு முன்னேறியது.

