/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
மகிழ்ச்சியில் வருண் சக்ரவர்த்தி
/
மகிழ்ச்சியில் வருண் சக்ரவர்த்தி
ADDED : மார் 13, 2025 11:22 PM

சென்னை: ''சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, என்னை சரியான நேரத்தில் பவுலிங் செய்து அழைத்து சிறப்பாக பயன்படுத்தினார்,'' என, வருண் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி 33. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் முதலில் இடம் பெறவில்லை. வேகப்பந்து வீச்சாளர் பும்ரா காயத்தில் இருந்து மீளாத நிலையில் தொடரில் இருந்து விலகினார். இதையடுத்து வருண் சக்ரவர்த்திக்கு அணியில் இடம் கிடைத்தது.
ஏற்கனவே 4 ஸ்பின்னர்கள் உள்ள நிலையில் வருண் சக்ரவர்த்தியை ஏன் சேர்க்க வேண்டும் என விமர்சனம் எழுந்தன. இருப்பினும் முதல் இரு போட்டியில் களமிறக்கப்படவில்லை. பின், நியூசிலாந்துக்கு எதிராக வாய்ப்பு பெற்ற வருண் சக்ரவர்த்தி, 5 விக்கெட் சாய்த்தார். அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி (2), நியூசிலாந்துக்கு எதிரான பைனல் (2) என 3 போட்டியில் 9 விக்கெட் சாய்த்து, கோப்பை வெல்ல கைகொடுத்தார்.
இதுகுறித்து வருண் சக்ரவர்த்தி கூறியது:
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சரியான நேரத்தில் பந்துவீச அழைத்து, என்னை சிறப்பாக பயன்படுத்தினார் ரோகித் சர்மா. 'பவர் பிளேயில்' 2 ஓவர்கள், கடைசி நேரத்தில் 2 ஓவர்கள் பவுலிங் செய்தேன். போட்டியின் இடையில் விக்கெட் தேவைப்படும் போதெல்லாம் பந்துவீசினேன். இப்படித் தான் எனது திறமையை அதிகரிக்க முடியும் என அவரிடம் தெரிவித்தேன். இவற்றை அவராகவே புரிந்து கொண்டார். ஏனெனில் அனைத்து காலத்திலும் சிறந்த கேப்டன் ரோகித் சர்மா.
இவ்வாறு அவர் கூறினார்.