/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
சாதிப்பாரா வருண் சக்ரவர்த்தி * இன்று விஜய் ஹசாரே தொடர் ஆரம்பம்
/
சாதிப்பாரா வருண் சக்ரவர்த்தி * இன்று விஜய் ஹசாரே தொடர் ஆரம்பம்
சாதிப்பாரா வருண் சக்ரவர்த்தி * இன்று விஜய் ஹசாரே தொடர் ஆரம்பம்
சாதிப்பாரா வருண் சக்ரவர்த்தி * இன்று விஜய் ஹசாரே தொடர் ஆரம்பம்
ADDED : டிச 20, 2024 11:07 PM

புதுடில்லி: தேசிய அளவிலான ஒருநாள் போட்டி விஜய் ஹசாரே டிராபி தொடர் இன்று துவங்குகிறது. தமிழகத்தின் வருண் சக்ரவர்த்தி சிறப்பாக செயல்பட்டால், இந்திய அணியில் இடம் பெறலாம்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர், பாகிஸ்தானில் வரும், 2025, பிப். 19-மார்ச் 9ல் நடக்க உள்ளது. இத்தொடர் துவங்க எட்டு வாரத்துக்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், இந்திய அணிக்கு தரமான 'ரிஸ்ட் ஸ்பின்னர்', ரிஷாப் பன்டுக்கு மாற்றாக, இரண்டாவது விக்கெட் கீப்பர், சிறப்பான 'பார்மில்' உள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் தேவைப்படுகின்றனர்.
இந்நிலையில் விஜய் ஹசாரே டிராபி தொடர் (50 ஓவர்) இன்று இந்தியாவில் துவங்குகிறது. இதில் பரோடா அணியின் ஹர்திக் பாண்ட்யா, அர்ஷ்தீப் சிங் (பஞ்சாப்), அவேஷ் கான் (ம.பி.,), கலீல் அகமது (ராஜஸ்தான்), முகேஷ் குமார் (பெங்கால்) உள்ளிட்ட 'வேகங்கள்' மீது எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
வருண் நம்பிக்கை
சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், தொடை பின்பகுதி காயத்தால் அவதிப்படுகிறார். இதனால் அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தருடன் இணைய மற்றொரு சுழல் பவுலர் தேவை. இதனால் வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதேபோல 62 ஒருநாள் போட்டியில் 47 ரன்னுக்கும் மேல் சராசரி வைத்துள்ள ஸ்ரேயாஸ், சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம் பெற முயற்சிக்கலாம். இவரது இடத்தை பெற, திலக் வர்மா கடும் சவால் தர காத்திருக்கிறார்.
ஆந்திராவில் இன்று நடக்கும் போட்டியில் தமிழகம், சண்டிகர் அணிகள் மோதுகின்றன.