/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் சமி
/
வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் சமி
ADDED : டிச 17, 2024 11:24 PM

செயின்ட் லுாசியா: வெஸ்ட் இண்டீசின் மூன்று வித அணிக்கும் சமி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னாள் கேப்டன் டேரன் சமி 40. இவரது தலைமையில், 2012, 2016 என இரு முறை வெஸ்ட் இண்டீஸ் அணி 'டி-20' உலக கோப்பை வென்றது. தற்போது மே, 2023 முதல், ஒருநாள், 'டி-20' அணி பயிற்சியாளராக உள்ளார். இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி 28ல் 15 ஒருநாள் போட்டிகளில் வென்றது. 7 இருதரப்பு தொடரில் 4ல் கோப்பை வென்றது.
'டி-20'ல் இந்தியா, இங்கிலாந்து உட்பட 4 அணிக்கு எதிராக சொந்தமண்ணில் கோப்பை கைப்பற்றியது. மொத்தம் 35ல் 20 'டி-20' ல் வென்றது.
டெஸ்ட் அணிக்கு ஆன்ட்ரே கோலே பயிற்சியாளராக உள்ளார். இவரது, தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் அணி பங்கேற்ற 10 டெஸ்டில் 1 ல் மட்டும் வென்றது. 7ல் தோற்றது. 2 போட்டி 'டிரா' ஆனது. இதையடுத்து 2025 ஏப்ரல் முதல், சமி டெஸ்ட் அணிக்கும் பயிற்சியாளராக செயல்பட உள்ளார்.
அவர் கூறுகையில்,'' வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக எவ்வித கிரிக்கெட் அணிக்கும், எந்த பணியிலும் செயல்பட தயாராக உள்ளேன். இது எப்போதும் பெருமையானது. டெஸ்ட் அணி பயிற்சியாளர் என்ற செய்தியை நான் எதிர்பார்க்கவில்லை,'' என்றார்.