/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
சால்ட் சதம்: இங்கிலாந்து அபாரம் * வீழ்ந்தது வெஸ்ட் இண்டீஸ்
/
சால்ட் சதம்: இங்கிலாந்து அபாரம் * வீழ்ந்தது வெஸ்ட் இண்டீஸ்
சால்ட் சதம்: இங்கிலாந்து அபாரம் * வீழ்ந்தது வெஸ்ட் இண்டீஸ்
சால்ட் சதம்: இங்கிலாந்து அபாரம் * வீழ்ந்தது வெஸ்ட் இண்டீஸ்
ADDED : நவ 11, 2024 12:28 AM

பிரிட்ஜ்டவுன்: வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான முதல் 'டி-20'ல் இங்கிலாந்து அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. பில் சால்ட் சதம் விளாசி கைகொடுத்தார்.
வெஸ்ட் இண்டீஸ் சென்ற இங்கிலாந்து அணி 5 போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி பிரிட்ஜ்டவுனில் நடந்தது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் பட்லர், பீல்டிங் தேர்வு செய்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிரண்டன் கிங் (3), லீவிஸ் (13) ஜோடி சுமார் துவக்கம் தந்தது. நிகோலஸ் பூரன் 38 ரன் எடுத்தார். கேப்டன் பாவெல் (18) கைவிட, ரசல் (30), குடகேஷ் (33) சற்று உதவினர். வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 182/9 ரன் எடுத்தது. ஷெப்பர்டு (35) அவுட்டாகாமல் இருந்தார்.
சால்ட் அசால்ட்
கடின இலக்கைத் துரத்திய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட், வில் ஜாக்ஸ் (17) ஜோடி துவக்கம் தந்தது. பட்லர் ஒரே பந்தில் 'டக்' அவுட்டானார். அடுத்து சால்ட், ஜேக்கப் பெத்தெல் இணைந்து மின்னல் வேகத்தில் ரன் குவித்தனர். ஷெப்பர்டு பந்தில் பவுண்டரி அடித்த சால்ட், 53வது பந்தில் சதம் கடந்தார்.
இங்கிலாந்து அணி 16.5 ஓவரில் 183/2 ரன் எடுத்து 8 விக்கெட்டில் வெற்றி பெற்றது. தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. சால்ட் (103), பெத்தெல் (58) அவுட்டாகாமல் இருந்தனர்.