/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
வெளியேறியது இங்கிலாந்து அணி * அரையிறுதியில் வெஸ்ட் இண்டீஸ்
/
வெளியேறியது இங்கிலாந்து அணி * அரையிறுதியில் வெஸ்ட் இண்டீஸ்
வெளியேறியது இங்கிலாந்து அணி * அரையிறுதியில் வெஸ்ட் இண்டீஸ்
வெளியேறியது இங்கிலாந்து அணி * அரையிறுதியில் வெஸ்ட் இண்டீஸ்
ADDED : அக் 15, 2024 11:08 PM

துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்சில் பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் 'பி' பிரிவில் இங்கிலாந்து (6 புள்ளி), தென் ஆப்ரிக்கா (6), வெஸ்ட் இண்டீஸ் (4) அணிகள் முதல் 3 இடத்தில் இருந்தன. நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது.
இங்கிலாந்து அணிக்கு மையா (14), டேனி வயாத் (16) ஜோடி துவக்கம் தந்தது. நாட் சிவர் (57), அரைசதம் கடந்தார். இங்கிலாந்து அணி 20 ஓவரில் 141/7 ரன் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் ஹேலே மாத்யூஸ் (50), குயானா (52) ஜோடி சூப்பர் துவக்கம் தந்தது. டாட்டின் 19 பந்தில் 27 ரன் எடுக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 18 ஓவரில் 144/4 ரன் எடுத்து, 6 விக்கெட்டில் வெற்றி பெற்றது.
இதையடுத்து பட்டியலில் தலா 6 புள்ளியுடன் முதல் இரு இடம் பெற்ற வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்க அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இங்கிலாந்து 6 புள்ளி பெற்ற போதும், ரன்ரேட் அடிப்படையில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டு, தொடரில் இருந்து வெளியேறியது.
அரையிறுதியில் ஆஸ்திரேலியா-தென் ஆப்ரிக்கா (அக். 17), வெஸ்ட் இண்டீஸ்-நியூசிலாந்து (அக். 18) அணிகள் மோத உள்ளன.