/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கோப்பை வென்றது ஆஸ்திரேலியா: ஸ்காட்லாந்து பரிதாபம்
/
கோப்பை வென்றது ஆஸ்திரேலியா: ஸ்காட்லாந்து பரிதாபம்
ADDED : செப் 08, 2024 12:28 AM

எடின்பர்க்: மூன்றாவது 'டி-20' போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா கோப்பை வென்றது.
ஸ்காட்லாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா 2-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. மூன்றாவது போட்டி எடின்பர்க்கில் நடந்தது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலியா 'பீல்டிங்' தேர்வு செய்தது.
ஸ்காட்லாந்து அணிக்கு ஜார்ஜ் முன்சே (25) நல்ல துவக்கம் கொடுத்தார். பிரண்டன் மெக்முல்லன் (56) கைகொடுக்க ஸ்காட்லாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 149 ரன் எடுத்தது. ஆஸ்திரேலியா சார்பில் கேமிரான் கிரீன் 3 விக்கெட் சாய்த்தார்.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் (12) ஏமாற்றினார். கேப்டன் மிட்சல் மார்ஷ் (31), டிம் டேவிட் (25) கைகொடுத்தனர். அபாரமாக ஆடிய கிரீன் அரைசதம் கடந்தார். கிறிஸ் சோல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஆரோன் ஹார்டி வெற்றியை உறுதி செய்தார்.
ஆஸ்திரேலிய அணி 16.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 153 ரன் எடுத்து வெற்றி பெற்றது. கிரீன் (62 ரன், 39 பந்து, 5 சிக்சர்), ஹார்டி (11) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலியா 3-0 என கோப்பை வென்றது. ஆட்ட நாயகன் விருதை கிரீன் வென்றார்.