sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

திண்டுக்கல்-திருப்பூர் மோதல்: பைனல் வாய்ப்பு யாருக்கு

/

திண்டுக்கல்-திருப்பூர் மோதல்: பைனல் வாய்ப்பு யாருக்கு

திண்டுக்கல்-திருப்பூர் மோதல்: பைனல் வாய்ப்பு யாருக்கு

திண்டுக்கல்-திருப்பூர் மோதல்: பைனல் வாய்ப்பு யாருக்கு


ADDED : ஆக 01, 2024 11:51 PM

Google News

ADDED : ஆக 01, 2024 11:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: டி.என்.பி.எல்., தகுதிச் சுற்று-2ல் இன்று திண்டுக்கல், திருப்பூர் அணிகள் மோதுகின்றன.

தமிழகத்தில் டி.என்.பி.எல்., 8வது சீசன் நடக்கிறது. 'நடப்பு சாம்பியன்' கோவை, முதல் அணியாக பைனலுக்கு முன்னேறியது. சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கும் தகுதிச் சுற்று-2ல் திண்டுக்கல், திருப்பூர் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, சென்னையில் ஆக. 4ல் நடக்கும் பைனலில் விளையாடும்.

தகுதிச் சுற்று-1ல் கோவையிடம் தோல்வியடைந்த திருப்பூர் அணி, புள்ளிப்பட்டியலில் 'டாப்-2' வரிசையில் இடம் பிடித்ததால், தகுதிச் சுற்று-2ல் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. பேட்டிங்கில் துஷார் ரஹேஜா (316 ரன்), அமித் சாத்விக் (212) கைகொடுக்கலாம். பவுலிங்கில் நடராஜன் (12 விக்கெட்), அஜித் ராம் (11) பலம் சேர்க்கின்றனர்.

லீக் சுற்றில் 8 புள்ளிகளுடன் 4வது இடம் பிடித்த திண்டுக்கல் அணி, 'எலிமினேட்டர்' போட்டியில் சேப்பாக்கம் அணியை வீழ்த்தி, தகுதிச் சுற்று-2ல் விளையாடும் வாய்ப்பை பெற்றது. பேட்டிங்கில் ஷிவம் சிங் (360 ரன்), பாபா இந்திரஜித் (246) நம்பிக்கை தருகின்றனர். பவுலிங்கில் வருண் சக்கரவர்த்தி (8 விக்கெட்), கேப்டன் அஷ்வின் (8) சாதித்தால் வெற்றி பெறலாம்.






      Dinamalar
      Follow us