sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

டுபிளசி சாதனை சதம்: 'டி-20' அரங்கில் அசத்தல்

/

டுபிளசி சாதனை சதம்: 'டி-20' அரங்கில் அசத்தல்

டுபிளசி சாதனை சதம்: 'டி-20' அரங்கில் அசத்தல்

டுபிளசி சாதனை சதம்: 'டி-20' அரங்கில் அசத்தல்


ADDED : ஜூன் 30, 2025 09:41 PM

Google News

ADDED : ஜூன் 30, 2025 09:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டல்லாஸ்: மேஜர் லீக் போட்டியில் அசத்திய டுபிளசி, சதம் விளாசி சாதனை படைத்தார்.

அமெரிக்காவில், மேஜர் லீக் கிரிக்கெட் ('டி-20') 3வது சீசன் நடக்கிறது. டல்லாசில் நடந்த லீக் போட்டியில் கேப்டன் டுபிளசி (103*) கைகொடுக்க டெக்சாஸ் அணி (223/4), 39 ரன் வித்தியாசத்தில் நிக்கோலஸ் பூரன் வழிநடத்தும் நியூயார்க் அணியை (184/9) வீழ்த்தியது.

சமீபத்தில் சான் பிரான்சிஸ்கோ அணிக்கு எதிராக 100 ரன் விளாசிய டுபிளசி 40, நடப்பு சீசனில் தனது 2வது சதத்தை பதிவு செய்தார். ஒட்டுமொத்த 'டி-20' அரங்கில், 40 வயதுக்கு மேல் 2 சதம் விளாசிய முதல் வீரர் என்ற வரலாறு படைத்தார். இங்கிலாந்தின் கிரஹாம் ஹிக், பால் கோலிங்வுட் உட்பட 4 பேர், 40 வயதுக்கு மேல் தலா ஒரு சதம் அடித்துள்ளனர்.

எட்டு சதம்: 'டி-20' அரங்கில் கேப்டனாக அதிக சதம் விளாசிய வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார் டுபிளசி. இதுவரை 200 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்ட டுபிளசி, 8 சதம் அடித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் மைக்கேல் கிளிங்கர் உட்பட 2 பேர், தலா 7 சதம் பதிவு செய்துள்ளனர். இந்தியாவின் கோலி, 5 சதம் அடித்துள்ளார்.

மூன்று சதம்: கடந்த ஆண்டு வாஷிங்டன் அணிக்கு எதிராக 100 ரன் விளாசிய டுபிளசி, நடப்பு தொடரில் 2 சதம் அடித்துள்ளார். மேஜர் லீக் அரங்கில் அதிக சதம் (3) விளாசிய வீரரானார் டுபிளசி. சான் பிரான்சிஸ்கோ அணிக்காக விளையாடி வரும் இங்கிலாந்து வீரர் ஆலன், 2 சதம் அடித்துள்ளார்.






      Dinamalar
      Follow us