/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்தியா 'பி' அணியில் ரிங்கு சிங்
/
இந்தியா 'பி' அணியில் ரிங்கு சிங்
ADDED : செப் 10, 2024 11:12 PM

அனந்தபுர்: துலீப் டிராபி தொடருக்கான இந்திய 'பி' அணியில் ரிங்கு சிங் சேர்க்கப்பட்டார்.
துலீப் டிராபி கிரிக்கெட் தொடரின் 61வது சீசன் நடக்கிறது. இந்தியா ஏ, பி, சி, டி என நான்கு அணிகள் விளையாடுகின்றன. இதன் இரண்டாவது கட்ட போட்டி நாளை துவங்குகிறது. இதனிடையே, வங்கதேச தொடருக்கான இந்திய அணியில் பல முன்னணி வீரர்கள் இடம் பெற்றனர்.
இதனால் துலீப் டிராபி அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. இதன் படி சுப்மன் கில்லுக்குப் பதில் இந்திய ஏ அணி கேப்டனாக மயங்க் அகர்வால் நியமிக்கப்பட்டார். ஜெய்ஸ்வால், ரிஷாப் பன்டுக்குப் பதில், பிரபுதேசாய், ரிங்கு சிங் சேர்க்கப்பட்டனர்.
இடதுகை வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள், சர்பராஸ் கான் இந்திய அணியில் சேர்க்கப்பட்டனர். எனினும் துலீப் டிராபி தொடருக்கான அணியில் இருந்து விடுவிக்கப்படவில்லை. இதனால், களமிறங்கும் இந்திய லெவன் அணியில் இவர்களுக்கு இடம் கிடைக்காது என சூசகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல அக்சர் படேலுக்குப் பதில் நிஷாந்த் சாந்து, காயத்தால் விலகிய தேஷ்பாண்டே இடத்தில் வித்வாத் கவேரப்பா சேர்க்கப்பட்டனர்.