/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஸ்ரேயாஸ், தேவ்தத் அரைசதம் * இந்தியா 'டி' அணி முன்னிலை
/
ஸ்ரேயாஸ், தேவ்தத் அரைசதம் * இந்தியா 'டி' அணி முன்னிலை
ஸ்ரேயாஸ், தேவ்தத் அரைசதம் * இந்தியா 'டி' அணி முன்னிலை
ஸ்ரேயாஸ், தேவ்தத் அரைசதம் * இந்தியா 'டி' அணி முன்னிலை
ADDED : செப் 06, 2024 11:16 PM

பெங்களூரு: ஸ்ரேயாஸ், தேவ்தத் படிக்கல் அரைசதம் கைகொடுக்க, இந்தியா 'டி' அணி 202 ரன் முன்னிலை பெற்றுள்ளது.
துலீப் டிராபி 61வது சீசன் நடக்கிறது. பெங்களூருவில் நடக்கும் போட்டியில் இந்தியா 'ஏ', 'பி' அணிகள் விளையாடுகின்றன. முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் இந்தியா 'பி' அணி 202/7 ரன் எடுத்திருந்தது.
முஷீர் அபாரம்
நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த முஷீர் கான், 150 ரன்களை கடந்தார். 8வது விக்கெட்டுக்கு 205 ரன் சேர்த்த போது, முஷீர் கான் 181 ரன்னுக்கு, குல்தீப் சுழலில் அவுட்டானார். அரைசதம் கடந்த நவ்தீப் சைனி (56), ஆகாஷ் தீப் பந்தில் வீழ்ந்தார். இந்தியா 'பி' அணி முதல் இன்னிங்சில் 321 ரன் எடுத்தது.
இந்தியா 'ஏ' அணிக்கு மயங்க் அகர்வால் (36), கேப்டன் சுப்மன் கில் (25) வேகமாக ரன் சேர்த்தனர். 2வது நாள் முடிவில் இந்தியா 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 134/2 ரன் எடுத்து, 187 ரன் பின்தங்கி இருந்தது.
ஸ்ரேயாஸ் விளாசல்
அனந்தபூரில் நடக்கும் மற்றொரு போட்டியில் இந்தியா 'சி', 'டி' அணிகள் விளையாடுகின்றன. இந்தியா 'டி' அணி முதல் இன்னிங்சில் 164 ரன் எடுத்தது. முதல் நாள் முடிவில் இந்தியா 'சி' அணி, முதல் இன்னிங்சில் 91/4 ரன் எடுத்திருந்தது.
நேற்று இரண்டாவது நாளில் பாபா இந்திரஜித் 72 ரன் எடுத்து கைகொடுத்தார். மற்ற வீரர்கள் ஏமாற்ற, இந்தியா 'சி' அணி முதல் இன்னிங்சில் 168 ரன்னுக்கு சுருண்டது.
பின் களமிறங்கிய இந்தியா 'டி' அணிக்கு கேப்டன் ஸ்ரேயாஸ், 44 பந்தில் 54 ரன் விளாசினார். தேவ்தத் படிக்கல் 56 ரன் எடுத்தார். 2வது நாள் முடிவில் இந்தியா 'டி' அணி 2 வது இன்னிங்சில் 206/8 ரன் எடுத்து, 202 ரன் முன்னிலை பெற்றிருந்தது.