/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கிழக்கு டில்லி 'சாம்பியன்': டில்லி பிரிமியர் லீக் தொடரில்
/
கிழக்கு டில்லி 'சாம்பியன்': டில்லி பிரிமியர் லீக் தொடரில்
கிழக்கு டில்லி 'சாம்பியன்': டில்லி பிரிமியர் லீக் தொடரில்
கிழக்கு டில்லி 'சாம்பியன்': டில்லி பிரிமியர் லீக் தொடரில்
ADDED : செப் 09, 2024 11:27 PM

புதுடில்லி: டில்லி பிரிமியர் லீக் தொடரில் கிழக்கு டில்லி அணி சாம்பியன் பட்டம் வென்றது. பைனலில் 3 ரன் வித்தியாசத்தில் தெற்கு டில்லி அணியை வீழ்த்தியது.
டில்லி பிரிமியர் லீக் ('டி-20') முதல் சீசன் டில்லியில் நடந்தது. இதன் பைனலில் கிழக்கு, தெற்கு டில்லி அணிகள் மோதின. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த கிழக்கு டில்லி அணிக்கு கேப்டன் ஹிம்மத் சிங் (20), ஹர்திக் சர்மா (21) ஆறுதல் தந்தனர். ஆயுஷ் படோனி வீசிய கடைசி ஓவரில் 5 சிக்சர் விளாசிய மயங்க் ரவாத் 39 பந்தில், 78* ரன் குவித்தார். கிழக்கு டில்லி அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 183 ரன் எடுத்தது. தெற்கு டில்லி அணி சார்பில் குல்திப் யாதவ், ராகவ் சிங் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
'திரில்' வெற்றி: கடின இலக்கை விரட்டிய தெற்கு டில்லி அணிக்கு தேஜஸ்வி தஹியா (68) நம்பிக்கை தந்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 18 ரன் தேவைப்பட்டன. ரவுனக் வகேலா பந்துவீசினார். இந்த ஓவரில் திக்வேஷ் ரதி (21*), ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்த போதும் 15 ரன் மட்டும் கிடைத்தன. தெற்கு டில்லி அணி 20 ஓவரில் 180/9 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. கிழக்கு டில்லி அணி சார்பில் சிம்ரன்ஜீத் சிங், ரவுனக் தலா 3 விக்கெட் சாய்த்தனர்.
பெண்களுக்கான டில்லி பிரிமியர் லீக் தொடரில், வடக்கு டில்லி அணி கோப்பை வென்றது.