ADDED : ஆக 29, 2026 10:49 PM

லார்ட்ஸ்: லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து அணி வலுவான முன்னிலை பெற்றது.
லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில், இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 290, பாகிஸ்தான் 110 ரன் எடுத்தன. இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 81/3 ரன் எடுத்திருந்தது. எமிலியோ (30), புரூக் (7) அவுட்டாகாமல் இருந்தனர்.
மூன்றாம் நாள் ஆட்டம் மழையால் 3 மணி நேரத்திற்கு மேல் தாமதமாக துவங்கியது. முகமது அபாஸ் பந்தில் எமிலியோ (31) அவுட்டானார். இங்கிலாந்து அணி 99/4 ரன் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டது. ஹாரி புரூக் (34) ஓரளவு கைகொடுத்தார். ஜேமி ஸ்மித் (7), அட்கின்சன் (7) ஏமாற்றினர். பொறுப்பாக ஆடிய டான் லாரன்ஸ், 64 பந்தில் அரைசதம் எட்டினார்.
இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 177/7 ரன் எடுத்து, 357 ரன் முன்னிலையில் இருந்த போது, ஆட்டம் மழையால் நிறுத்திவைக்கப்பட்டது. லாரன்ஸ் (50), ராபின்சன் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.
