/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இங்கிலாந்து அணி அசத்தல்: நியூசிலாந்து அணி ஏமாற்றம்
/
இங்கிலாந்து அணி அசத்தல்: நியூசிலாந்து அணி ஏமாற்றம்
இங்கிலாந்து அணி அசத்தல்: நியூசிலாந்து அணி ஏமாற்றம்
இங்கிலாந்து அணி அசத்தல்: நியூசிலாந்து அணி ஏமாற்றம்
ADDED : டிச 01, 2024 09:38 PM

கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் அசத்திய இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து சென்றுள்ள இங்கிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் கிறைஸ்ட்சர்ச்சில் நடந்தது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 348, இங்கிலாந்து 499 ரன் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சில் 155/6 ரன் எடுத்திருந்தது. டேரில் மிட்செல் (31), நாதன் ஸ்மித் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
நான்காம் நாள் ஆட்டத்தில் பிரைடன் கார்ஸ் பந்தில் நாதன் ஸ்மித் (21), மாட் ஹென்ரி (1) அவுட்டாகினர். பொறுப்பாக ஆடிய டேரில் மிட்செல் (84) அரைசதம் கடந்தார். டிம் சவுத்தீ (12) நிலைக்கவில்லை. நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சில் 254 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இங்கிலாந்து சார்பில் பிரைடன் கார்ஸ் 6 விக்கெட் சாய்த்தார்.
எளிய இலக்கு: பின், 104 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜாக் கிராலே (1) ஏமாற்றினார். பென் டக்கெட் (27) ஆறுதல் தந்தார். பின் இணைந்த ஜேக்கப் பெத்தெல், ஜோடி ரூட் ஜோடி நம்பிக்கை தந்தது. 37 பந்தில் அரைசதம் எட்டிய பெத்தெல் வெற்றியை உறுதி செய்தார்.
இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 104 ரன் எடுத்து வெற்றி பெற்றது. பெத்தெல் (50), ஜோ ரூட் (23) அவுட்டாகாமல் இருந்தனர். இரு இன்னிங்சிலும் சேர்த்து 10 விக்கெட் (4+6) கைப்பற்றிய இங்கிலாந்தின் பிரைடன் கார்ஸ், ஆட்ட நாயகன் விருது வென்றார். இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது டெஸ்ட் வரும் டிச. 6ல் வெல்லிங்டனில் துவங்குகிறது.