/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இங்கிலாந்து அணி வெற்றி: ஜோ ரூட் அரைசதம்
/
இங்கிலாந்து அணி வெற்றி: ஜோ ரூட் அரைசதம்
UPDATED : ஆக 25, 2024 12:04 AM
ADDED : ஆக 24, 2024 10:56 PM

மான்செஸ்டர்: ஜோ ரூட் அரைசதம் விளாச, இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து, இலங்கை அணிகள் மோதிய முதல் டெஸ்ட் மான்செஸ்டரில் நடந்தது. முதல் இன்னிங்சில் இலங்கை 236, இங்கிலாந்து 358 ரன் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில் இலங்கை அணி 2வது இன்னிங்சில் 204/6 ரன் எடுத்திருந்தது. சண்டிமால் (20), கமிந்து (56) அவுட்டாகாமல் இருந்தனர்.
நான்காம் நாள் ஆட்டத்தில் கமிந்து மெண்டிஸ் (113), டெஸ்ட் அரங்கில் தனது 3வது சதத்தை பதிவு செய்தார். தினேஷ் சண்டிமால் (79) அரைசதம் கடந்தார். இலங்கை அணி 2வது இன்னிங்சில் 326 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இங்கிலாந்து சார்பில் மாத்யூ பாட்ஸ், வோக்ஸ் தலா 3 விக்கெட் சாய்த்தனர்.
ரூட் அரைசதம்: பின், 205 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் (11), கேப்டன் போப் (6) ஏமாற்றினர். டான் லாரன்ஸ் (34), ஹாரி புரூக் (32), ஜேமி ஸ்மித் (39) ஓரளவு கைகொடுத்தனர். பொறுப்பாக ஆடிய ஜோ ரூட் அரைசதம் கடந்தார். பிரபாத் ஜெயசூர்யா பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரூட் வெற்றியை உறுதி செய்தார்.
இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 205 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ரூட் (62), வோக்ஸ் (8) அவுட்டாகாமல் இருந்தனர்.